உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி அடுத்த அணுகுண்டு சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வடகொரியாவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

இதனையும்மீறி, வடகொரியா இதுவரை 5 அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் கடந்த ஜனவரி மாதம் தேதி நடத்திய 4வது அணுகுண்டு, பல மடங்கு ஆற்றல் வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு. இந்த ஆண்டில் (2016) மட்டும் 3 அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செயற்கைகோள் படங்கள் மூலம் வடகொரியாவிலுள்ள புக்கி நகரில் அடுத்த அணுகுண்டு சோதனைக்கு அந்நாடு தயாராகி வருவது தெரியவருகிறது. இதனையடுத்து வடகொரியா எந்நேரத்திலும் அடுத்த அணுகுண்டை சோதித்துப்பார்க்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.