அமெரிக்காவை சேர்ந்த இசை ஜாம்பவான் பாப் டைலன் நோபல் விருதினை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாடகர், பாடலாசிரியர், ஓவியர், கவிஞர், நடிகர் என பல்வேறு துறைகளில் சிறந்தவரான பாப் டைலானுக்கு இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தனக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு குறித்து பாப்டைலன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். இதனால் நோபல் பரிசை அவர் ஏற்றுக் கொண்டாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதுடன், டைலனின் மௌனம் அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது என நோபல் குழு விமர்சித்திருந்தது.
இந்நிலையில், ‘நோபல் பரிசு கிடைத்திருப்பது நம்பவே முடியவில்லை என்றும், நோபல் விருதினை ஏற்றுக் கொண்டுள்ளதாக பாடகர் பாப் டைலன்இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
