2016-ம் ஆண்டு வேதியியல் துறைக்‍கான நோபல் பரிசு, பிரான்ஸ், அமெரிக்‍கா, நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த 3 பேருக்‍கு வழங்கப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்‍கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மகத்தான சாதனைகளை படைத்தவர்கள், ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்‍கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் வேதியியல் துறைக்‍கான நோபல் பரிசு, பிரான்சின் Jean Pierre, அமெரிக்‍காவின் Fraser Stoddart, நெதர்லாந்தின் Bernard Feringa ஆகிய 3 பேருக்‍கு பகிர்ந்தளிக்‍கப்படுகிறது. மூலக்‍கூறு ரீதியான பல்​பொருள் ஒருங்கிணைந்த மற்றும் வடிவமைப்பு ஆராய்ச்சியில் சாதனை படைத்ததற்கு நோபல் பரிசு அறிவிக்‍கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல் துறைக்‍கான நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்‍கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்‍கது.