நித்தி எதுக்கு உனக்கு இந்த புத்தி... விர்ஜினியாவில் இருந்து வீடியோ வெளியிட்டு தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த சிஷ்யைகள்..!

நித்யானந்தா வழக்கு தொடர்பாக அவரது பெண் சீடர்கள் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

nithyananda issue...Missing Sisters case

நித்யானந்தா வழக்கு தொடர்பாக அவரது பெண் சீடர்கள் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு பெங்களூரு, திருவண்ணாமலை, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆசிரமங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த ஆசிரமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் 3 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகியோர் நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.

nithyananda issue...Missing Sisters case

ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சித்ரவதை செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா அகமதாபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை மீட்டனர். ஆனால், மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. இதனையடுத்து, தனது 2 மகள்களை மீட்டுதரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ஜனார்த்தனின் 2 மகள்களையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

nithyananda issue...Missing Sisters case

இதற்கிடையே, தலைமறைவான நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என பெயர் சூட்டி அதனை தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் இறங்கியதாக தகவல் வெளியானது. ஆனால், இதை ஈக்வெடார் அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார். 

இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயமான 2 பெண்கள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாங்கள் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருக்கிறோம். சரியான முகவரி தெரியவில்லை. எங்கள் தந்தையுடன் செல்ல விருப்பமில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

nithyananda issue...Missing Sisters case

அந்த பெண்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளதால் நீதிமன்றம் சம்மதித்தால் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணைக்கு ஆஜர்படுத்துவோம்' என்றார். இதையடுத்து வழக்கில் தொடர்புடையவர்கள் வரும் 19ம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. வழக்கை ஒத்திவைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios