கருப்பு உடையில் கலக்கிய அம்பானி தம்பதி! களைகட்டிய ட்ரம்ப் பதவியேற்பு விருந்து!
வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற டிரம்ப் பதவியேற்பதற்கு முந்தைய விருந்தில் முகேஷ் அம்பானியுடன் நீதா அம்பானியும் கலந்துகொண்டார். கருப்பு சேலை மற்றும் ஆடம்பர நகைகள் அணிந்திருந்த அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முன்பாக, வாஷிங்டனில் நடந்த விருந்தில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தன் மன்ஐவி நீதா அம்பானியும் கலந்துகொண்டார்.
ஜனவரி 18ஆம் தேதி நடந்த சிறப்பு விருந்தில் சுமார் 100 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். அம்பானி தம்பதி, இந்த கேன்டில் லைட் டின்னரைத் தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் டிரம்பின் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்ள உள்ளனர்.
விருந்து நிகழ்விற்காக, நீதா அம்பானி உன்னதமான நகைகளுடன் கவர்ச்சியான கருப்பு நிறப் புடவை அணிந்திருந்தார். அவரது தோற்றம் விருந்தில் கலந்துகொண்டிருந்த அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
நீதா அம்பானி உடையின் சிறப்பு:
நீதா அம்பானி ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல, ஒரு பேஷன் ஆர்வலரும் கூட. எந்த நிகழ்ச்சியிலும் அனைவரையும் பிரமிக்க வைக்கும் நேர்த்தியான நகைகள் மற்றும் ஆடைகளை அணியக்கூடியவர். சேலைகளின் மீது தீராத காதல் கொண்ட நீதா அம்பானி, இந்த விருந்தில் கிளாசிக் ஒன்பது கெஜ புடவையை அணிந்திருந்தார்.
கோல்டன் எம்ப்ராய்டரி செங்குத்து கோடுகளுடன் இளஞ்சிவப்பு பார்டர்களால் அலங்கரிக்கப்பட்ட நேர்த்தியான கருப்பு பட்டுப் புடவையை அவர் அணிந்திருந்தார். குளிர்காலத்திற்கு ஏற்ப, புதுவிதமான கருப்பு முழு கை ரவிக்கையும் ஸ்டைலான கருப்பு நிற கோட்டும் அணிந்து அனைவரின் பார்வைஐயும் தன் பக்கம் ஈர்த்தார். நெக்லைன் மற்றும் ஸ்லீவ்களில் நுண்ணிய வேலைப்பாடுகள் கூடுதல் கவர்ச்சியைச் சேர்த்தன.
நீதா அம்பானியின் நகைகள்:
நிதா அம்பானியின் ஆடம்பரமான நகைகளும் அவரது தோற்றத்துக்கு மெருகூட்டின. பெரிய பச்சை மரகதங்கள் பதிக்கப்பட்ட பலஅடுக்கு வைர நெக்லஸ், அதற்குப் பொருத்தமான ஸ்டட், மணிக்கட்டை அலங்கரிக்கும் வளையல்கள் என ஒவ்வொரு நகையும் அழகில் ஜொலித்தன. இத்துடன் விரலில் ஒரு பெரிய மோதிரம், கையில் சிறிய கருப்பு நிற கைப்பை, நெற்றியில் பச்சை நிறப் பொட்டு அணிந்து வலம் வந்தார்.
மறுபுறம், முகேஷ் அம்பானி கிளாசிக் பிளாக் பிளேஸர் அணிந்திருந்தார். மிருதுவான வெள்ளை கலர் சட்டை, தடித்த சிவப்பு நிற டை அணிந்திருந்த அவர் மனைவியுடன் இணைந்து பல பிரபலங்களையும் சந்தித்து உரையாடினார்.