சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து... 9 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு..!
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து சடலமாக மீட்டுகப்பட்டுள்ளனர். 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்டுகப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குயெட்டாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மின் கசிவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுரங்கத்தின் உட்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 11 பேர் சிக்கிக் கொண்டனர். மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சுரங்கத்தில் உளள விஷவாயு கசிந்ததால் மீட்புக் குழுவை சேர்ந்த இருவர் மயக்கம் அடைந்தனர். இதனால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.