உலக விஞ்ஞானிகளை அதிரவைத்த புதிய ஆய்வு முடிவு..!! கொரோனாவின் மற்றொரு கொடூரம்..!!

கொரோனா வைரஸ் குறித்து புதுப்புது ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வைரஸ் தொற்று அறிகுறிகள் முழுமையாக தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது வைரஸ் தொற்று அடைகாக்கும் காலம் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். 
 

New research results that shocked world scientists,  Another atrocity of Corona

கொரோனா வைரஸ் குறித்து புதுப்புது ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வைரஸ் தொற்று அறிகுறிகள் முழுமையாக தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது வைரஸ் தொற்று அடைகாக்கும் காலம் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இதுவரை உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 34 ஆயிரத்து 777 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 கோடியே 29 லட்சத்து 29 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா பிரேசில், இந்தியா, ரஷியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக அளவில் எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அது கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. தடுப்பூசி வந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த  உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 

New research results that shocked world scientists,  Another atrocity of Corona

அதற்கான ஆராய்ச்சிகள் ஒருபுறம் வேகமாக நடந்து வரும் நிலையில், மறுபுறம் கொரோனா வைரஸ் தன்மை மற்றும் அது பரவும் விதம், அதன் செயல்பாடு என பல்வேறு கோணங்களில் வைரஸை பகுத்து ஆராயும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒரு மனிதருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் அறிகுறிகள் தென்பட எத்தனை நாட்கள் ஆகும் என்பதை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதட் அறிகுறி தென்படும் காலம் வரை அது அடைகாக்கும் காலம் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். முதலில் வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆனது, ஆனால் தற்போது அந்த காலம் 8 நாட்களாக அதிகரித்துள்ளது.  வைரஸ் தொற்று உள்ள பல நோயாளிகளை ஆராய்ந்ததில், விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

New research results that shocked world scientists,  Another atrocity of Corona

இந்த ஆய்வு முடிவுகள் சயின்ஸ் அட்வான்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது, சீனாவின் பீஜிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சுமார் 1,084 கொரோனா நோயாளிகளை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா வைரஸ் அவர்களுக்கு முதன்முதலாகத் தோன்றி பின்னர் அதன் அறிகுறி வெளிப்பட்ட  நாட்களை கணக்கிட்டு இந்த முடிவு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக அடைகாக்கும் காலம் 7.75 நாட்கள் என கண்டறியப்பட்டுள்ளது.  அதேபோல் சில நோயாளிகளுக்கு 14 நாட்கள் அடைக்காக்கும் காலமாக கண்டறியப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்துவதை  நடைமுறையாக வைத்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது கவலையை ஏற்படுத்தி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இது ஒரு அனுமானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவு என்றும், உலகின் பல்வேறு நிகழ்வுகளுக்கு இது பொருந்தாது என்றும் இன்னும் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios