Nepal Flood : நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் திரிசூலி பஜார் பகுதியே உருக்குலைந்து போயுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டின் இடிபாடுகளை விட்டு நகர மறுத்து, ஒரு நாய் தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஒரு இயற்கை பேரிடர் நடந்தா, வீடு, வாசல், சொத்து மட்டும் அழிஞ்சு போறதில்லை. அதுக்குள்ள சொல்ல முடியாத பல கதைகளும், மனசுல ஆறாத காயங்களும் புதைஞ்சு கிடக்கும். போன வாரம் நேபாளத்தின் திரிசூலி பஜார் பகுதியில ஏற்பட்ட பயங்கர வெள்ளம், அப்படி ஒரு உருக்கமான கதைக்கு சாட்சியா இருக்கு.
கடும் வெள்ளத்தால நாலு வீடுகள் மொத்தமா அடிச்சுட்டு போயிடுச்சு. இப்போ அந்த இடமே சேறும் சகதியுமா, மரக்கட்டைகளும், கான்கிரீட் குவியல்களுமா கிடக்கு. இந்த அழிவுக்கு நடுவுல, ஒரு செல்லப் பிராணியோட பாசப் போராட்டம், அங்க இருக்குற மீட்புப் படையினர், மக்கள்னு எல்லாரையும் கலங்க வச்சிருக்கு.
இதையும் படிங்க : Silver Jewellery : கறுத்துப்போன வெள்ளி நகைகளை 5 நிமிஷத்துல பளபளக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!
அங்கேயே அமர்ந்திருக்கும் நாய்
சம்பவ இடத்துல, ஒரு வெள்ளை கறுப்பு நிற நாய், சேறு படிஞ்ச ஒரு இடத்துல அசையாம உக்காந்திருக்கு. அது கழுத்துல, அதோட ஓனர் ஆசையா மாட்டிவிட்ட பெல்ட் இன்னமும் இருக்கு. சுத்திலும் பெரிய பெரிய JCB இயந்திரங்கள் இடிபாடுகளை அப்புறப்படுத்திட்டு இருக்கு. அந்த சத்தத்துக்கு நடுவுலயும், நூத்துக்கணக்கான மக்கள் நடமாட்டத்துக்கு மத்தியிலயும் அந்த நாய் அந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகரல.
சில நாளைக்கு முன்னாடி வரைக்கும் அதோட வீடு இருந்த வாசலை, கண்ணை எடுக்காம பார்த்துக்கிட்டே இருக்கு.
இதையும் படிங்க : Guru Mangal Rajayoga : குரு-செவ்வாய் இணைந்து உருவாகும் குரு மங்கள ராஜயோகம்! 4 ராசிகளுக்கு சொத்து சேரும், லாபம் பெருகும்!
மீட்புப் படையினர் எவ்வளவோ முயற்சி பண்ணியும், அந்த நாயை அந்த இடத்துல இருந்து நகர்த்த முடியல. அதை அப்புறப்படுத்தினா, திரும்பவும் அதே இடத்துக்கே வந்து உக்காந்துக்குது. சுத்தி நடக்குற எதையுமே அது கண்டுக்கல. பயந்து ஓடவும் இல்ல, மத்த நாய்கள் மாதிரி வாலை ஆட்டி பாசத்தையும் காட்டல. ஏதோ ஒரு பெரிய சோகத்துல உறைஞ்சு போய் உக்காந்திருக்கு.
இதையும் படிங்க : Ice Cube Hack : வாஷிங் மெஷின்ல ஐஸ் கியூப் போட்டா துணி சுருங்காதா? வாங்க பாப்போம்!
நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
அங்க மீட்புப் பணியில ஈடுபட்டிருந்த விக்ரம் தாப்பா என்ற தன்னார்வலர், அந்த நெஞ்சை உருக்கும் அனுபவத்தை பத்தி சொன்னார். "வெள்ளத்துல வீடுகள் போனதுல இருந்து இந்த நாயை இதே இடத்துலதான் பார்க்கிறோம். நாங்க அதை அங்க இருந்து கூட்டிட்டு வந்து, சாப்பாடு, தங்குறதுக்கு இடம் கொடுக்க முயற்சி பண்ணோம். பிஸ்கட் கொடுத்தோம், செல்லப் பேரா கூப்பிட்டுப் பார்த்தோம். ஆனா அது ஒரு தடவ கூட எங்களை திரும்பிப் பார்க்கல. சாப்பாட்டை தொடக்கூட இல்லை, எந்த சத்தத்துக்கும் ரியாக்ட் பண்ணல," அப்படின்னு அவர் சொன்னார்.
இதையும் படிங்க : Kungumam : சுமங்கலிப் பெண்கள் உச்சி வகிடில் குங்குமம் வைப்பது ஏன் தெரியுமா?
உள்ளூர் மக்கள் சொல்வது!
வெள்ளத்துல அடிச்சுட்டுப் போன நாலு வீடுகள்ல ஒண்ணுதான் இந்த நாயோட வீடா இருக்கும்னு உள்ளூர் மக்கள் நினைக்கிறாங்க. வெள்ளத்துல அதோட குடும்பத்தினர் அடிச்சுட்டு போயிருக்கலாம், இல்லனா பாதுகாப்பான இடத்துக்கு போயிருக்கலாம். ஆனா, இந்த செல்லப் பிராணிக்கு அது தெரியல. தன்னோட ஓனர் கண்டிப்பா இந்த வழியா திரும்பி வருவார்னு நம்பி, அந்த வீட்டு வாசலை காவல் காத்துட்டு இருக்கு.
இதையும் படிங்க : Thick Curd : கெட்டித் தயிர் வேணுமா? இந்த ஒரு இலையை போடுங்க! பாட்டி காலத்து டெக்னிக்!
விலங்குகள் நல நிபுணர் கருத்து
நாய்கள் மாதிரி உணர்வுப்பூர்வமான விலங்குகள், தங்களோட உரிமையாளர்கள்கிட்ட ரொம்ப ஆழமான பிணைப்புல இருக்கும்னு விலங்குகள் நல நிபுணர்கள் சொல்றாங்க. ஒரு பெரிய பேரிடருக்குப் பிறகு, தங்களுக்குப் பழக்கமானவங்களையோ, இடத்தையோ இழக்கும்போது, அதுங்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படும். இந்த மாதிரி நேரத்துல, நாய்கள் மன அழுத்தத்துக்குப் போய், சாப்பாடு, தூக்கம் இல்லாம, அந்த பழைய நினைவுகள் இருக்குற இடத்துலயே கிடக்கும். திரிசூலி பஜார்ல இருக்குற இந்த நாயோட நடவடிக்கையும் அந்த மாதிரி ஒரு மன அதிர்ச்சியோட வெளிப்பாடுதான்.
இதையும் படிங்க : Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் 40 வயதுக்கு பின் கோடீஸ்வரர் ஆவது உறுதி! உங்க பிறந்த தேதி இருக்கா?
சோஷியல் மீடியாவில் வைரல்
திரிசூலி பஜாரோட இந்த சம்பவம், இப்போ சோஷியல் மீடியாவுல ரொம்பவே வைரலாகி இருக்கு. ஒரு விலங்கோட பாசத்தை பார்த்து நிறைய பேர் ஆச்சரியப்படுறாங்க. சேறும் சகதியுமா இருக்குற அந்த இடிபாடுகள் மேல உக்காந்திருக்குற அந்த நாயோட படம், இப்போ வெறும் அழிவோட சின்னம் மட்டும் இல்ல. மனுஷன் மேல ஒரு விலங்கு காட்டுற உண்மையான அன்பு, நம்பிக்கை, விசுவாசத்தோட ஒரு நிரந்தர அடையாளமா மாறிடுச்சு. இப்போ உள்ளூர் விலங்குகள் நல அமைப்புகள் சில, மீட்புக் குழுக்கள்கிட்ட பேசி, அந்த நாயை காயப்படுத்தாம, பத்திரமா மீட்டு, மறுவாழ்வு மையத்துக்கு கொண்டுபோய் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செஞ்சிட்டு வராங்க.
இதையும் படிங்க : Washing Machine : வாஷிங் மெஷின்ல இப்படி துணியைப் போடுங்க, அழுக்கு சுத்தமா இருக்காது!


