Asianet News TamilAsianet News Tamil

nasa: Artemis: மீண்டும் நிலவுப் பயணம்: நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

நிலவுக்கு அனுப்பப்படும் நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 

NASA is preparing for the Saturday launch of the Moon Rocket Artemis 1.
Author
First Published Sep 2, 2022, 2:57 PM IST

நிலவுக்கு அனுப்பப்படும் நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு விண்ணில் ஆர்டெமிஸ் ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.

 விண்ணில் ராக்கெட் செலுத்துவதற்கு காலநிலை 60% சாதகமாகஇருப்பதால் நாளை விண்ணிக்கு ராக்கெட்டை ஏவுவதில் தாமதம் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது.

NASA is preparing for the Saturday launch of the Moon Rocket Artemis 1.

இதையும் படிங்க;- நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு… மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!!

இந்த வார தொடக்கத்தில் அதாவது ஆகஸ்ட் 29ம்தேதி  ஆர்டெமிஸ் ராக்கெட் செலுத்தப்பட இருந்தது. ஆனால் எரிபொருள்நிரப்புவதில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழிலநுட்ப கோளாறால் விண்ணில்ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் அமைந்துள்ளது. கடந்த 1969ம் ஆண்டு முதன்முதலாக நாசா விண்வெளியில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. இதற்கு அப்பல்லோ என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்தத்திட்டத்துக்கு ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

கிரேக்கத்தில்இரட்டை கடவுள்கள் பெயர் அப்பல்லோ, ஆர்டெமிஸ் அதன அடிப்படையில் இரு ராக்கெட்களுக்கும் நாசா பெயரிட்டுள்ளது. 

starbucks: ceo: ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்

NASA is preparing for the Saturday launch of the Moon Rocket Artemis 1.

நாசா விண்ணுக்கு ஏவும் ஆர்டெமிஸ் ராக்கெட் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தீவீரமான முயற்சிக்குப்பின் உருவாக்கப்பட்டுள்ளது. 3 அடுக்குகளாக இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ராக்கெட் உலகிலேயே சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். இந்த ராக்கெட் விண்ணில் புறப்படும்போது 20 கான்கார்ட் விமானங்கள் ஒரே நேரத்தில் விண்ணில் பறந்தால் ஏற்படும் சத்தத்தை வெளியிடும்.
இந்த வாரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தநிலையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அப்போது ராக்கெட்டிந் 4 பிரதான எஞ்சின்களும் கடும் சூடாகியிருந்தன. 

இதையடுத்து, பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இரவுபகலாக தொழில்நுட்ப வல்லுநர்கள் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள கோளறை சரி செய்துள்ளனர்.

china news: சீனா சந்திக்கும் புதிய தலைவலி! 36 ஆண்டுகளில் இல்லாத அளவு திருமணம் குறைந்துவிட்டது

ராக்கெட்டில் உள்ள ஓரியன் எனும் கேப்சூல் நீள்வட்டபாதையை அடைந்தவுடன் பிரிந்துவிடும். அடுத்த 37 நாட்கள் விண்வெளியில் இந்த கேப்சூல் சுற்றிவரும். அதாவது நிலவிலிருந்து 100 மைல் தொலைவில் சுற்றிவரும்.

 

இந்த ஓரியன் கேப்சூல் மூலம்தான் 2025ம்ஆண்டு நிலவுக்கு முதன்முதலாக ஒரு பெண் விண்வெளிஆய்வாளர் அனுப்பி வைக்கப்படஉள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios