நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு… மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!!
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறவினர் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறவினர் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளராக மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி உள்ளார். மேற்கு வங்காளத்தின் அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தன. இதில் அபிஷேக் பானர்ஜிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 2024 தேர்தலை இலக்காக வைத்து மீண்டும் இந்து முஸ்லீம் பிரச்சனையை தூண்ட பாஜக சதி.. அலறும் கி.வீரமணி.
இந்த விவகாரத்தில் ரூ.1,300 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து இருவரிடமும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அபிஷேக் பானர்ஜி இன்று ஆஜரானார்.
இதையும் படிங்க: உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ..! சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க
அவரிடம் அமலாக்கத்துறையினர் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மீண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு பின்னர் பேசிய அபிஷேக் பானர்ஜி, விசாரணைக்காக என்னை 30 முறை அழைத்தாலும் நான் வருவேன். பா.ஜ.க. காலில் விழமாட்டேன். தேசியக் கொடி விவகாரத்தில் அமித்ஷாவின் மகனைத் தாக்கியதால் அமலாக்கத்துறை அல்லது சிபிஐ மூலம் என்னை அச்சுறுத்த முடியாது என தெரிவித்தார்.