நிர்வாணமாக நின்ற பெண்.. மாடியில் இருந்து குதித்து தற்கொலை? அவர் வெளிநாட்டு ஊழியரா? சிங்கப்பூர் MOM விளக்கம்!
Singapore : சிங்கப்பூரின் யிஷூன் பகுதியில், கடந்த அக்டோபர் 12ம் தேதி, அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள துணிகள் உலர்த்தும் இடத்தில், நிர்வாணமாக நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர், மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) சமீபத்தில் யிஷூன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே துணி உலர்த்தும் இடத்தில் இருந்து கீழே குதித்து இறந்த பெண்மணி குறித்து மக்கள் மத்தியில் சில தவறான யூகங்கள் பரவி வருகின்றது. ஆனால் அவை உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த கட்டுரைகள் மற்றும் வீடியோ காட்சிகள் பரவி வருவதாகவும், அதோடு, அந்தப் பெண் புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண் என்ற வதந்தியும் இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் "இது உண்மைக்கு மாறானது. இறந்தவர் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர் அல்ல," அதே நேரத்தில் அந்த தற்கொலை சம்பவத்தில் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக MOM மேலும் கூறியுள்ளது. கடந்த அக்டோபர் 12 அன்று, பிளாக் 874 யிஷூன் ஸ்ட்ரீட் 81ன் 11 வது மாடியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே அந்தப் பெண், கட்டிடத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்துள்ளார்.
காசாவில் நிலவும் அசாதாரண சூழல்: அவசர கூட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் குழு அழைப்பு!
அப்போது அந்த பெண் நிர்வாணமாக இருந்தார் என்றும், இதையடுத்து அதே பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் வெளியான அறிக்கையில், அந்தப் பெண் பிலிப்பைன்ஸிலிருந்து புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணாக சிங்கப்பூர் வந்தவர் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த பெண் சிங்கப்பூர் நாட்டவர் தான் என்று இப்பொது தகவல் வெளியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சம்பவத்தன்று காலை 7:20 மணியளவில் பிளாக் 874 இல் உதவிக்காக காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
உடனே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கே 47 வயதான அந்த பெண் தரையில் கிடப்பதை கண்டு, உடனே மீட்பு படையினர் அவரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவின்றி இருந்த அவர், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சமத்துவம் குறித்து சிங்கப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.