Mount Etna Eruption: இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும் மவுண்ட் எட்னா! எரிமலை வெடிப்பால் விமானங்கள் ரத்து
ஐரோப்பாவில் உள்ள இத்தாலி நாட்டின் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக அருகில் உள்ள கேடானியா சென்றுவரும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலி நாட்டில் இருக்கும் மவுண்ட் எட்னா எரிமலை உலகப் புகழ் பெற்றது. அந்நாட்டின் தலைநகரமான ரோம் நகருக்கு அருகில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் எட்னா எரிமலை அமைந்துள்ளது. இந்த மலை வெடித்து தீப்பிழம்பு பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது.
எரிமலை கக்கும் தீப்பிழப்பு வழிந்து செல்லும்போது எழும் சாம்பல் அருகில் இருக்கும் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவி இருக்கிறது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கேடானியா செல்லும் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
பிரதமர் மோடிக்காக எதையும் செய்யத் துணிந்த நியூசிலாந்து பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா?
3,330 மீட்டர் உயரம் கொண்ட எட்னா எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறி வருகிறது. எரிமலை வெடிப்பினால் வரும் சாம்பலை மத்திய தரைக்கடல் தீவில் கரைகிறது. இதற்கு முன் 1992ஆம் ஆண்டில் தான் பெரிய அளவில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
இத்தாலி நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கேடானியா சென்று வர இயக்கப்படும் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரையில் கேடானியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
அட்ரானோ மற்றும் பியான்காவில்லாவில் உள்ள மக்கள் எரிமலையில் இருந்து உரத்த சத்தம் கேட்டதாகக் கூறினர் என இத்தாலிய செய்தி நிறுவனத்தின் மூலம் அறிய முடிகிறது. இத்தாலியின் தேசிய குடிமைப் பாதுகாப்பு நிறுவனம், அதிகமான எரிமலைக் கொந்தளிப்பை கருத்தில் கொண்டு, மவுண்ட் எட்னாவில் "திடீர்" மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு மவுண்ட் எட்னாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு பல வாரங்கள் நீடித்தது குறிப்பிட்டத்தக்கது. கடந்த ஆண்டு மீண்டும் எட்னாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அது சில நாட்களில் அடங்கியது.
Recurring Deposit rate hike in 2023: முதியோருக்கான 5 வருட ஆர்.டி.க்கு 10% வட்டி வழங்கும் வங்கி!