யாதும் ஊரே யாவரும் கேளிர்" புறநானூறு பாடலை பாடி அசத்திய மோடி !! ஐ.நா. அவையில் அதிரடி உரை!
ஐநா சபைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலை குறிப்பிட்டு பேசினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 130 கோடி இந்தியர்களின் சார்பாக பேசுவதாகக் கூறிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தம்மை தேர்ந்தெடுத்ததால், ஐ.நா.சபையில் பேச வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.
அப்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார்.
மக்களுக்கான மிகப்பெரிய மருத்துவ திட்டங்களை, தமது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், 2025ம் ஆண்டுக்குள், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ விரும்புவதாகவும் கூறிய பிரதமர், ஒருமுறை தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க, இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தைப் போன்று, உலகம் முழுவதும் தூய்மை பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள சில நாடுகள், தங்களை காயப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.