Modi projects his government no-corruption says no taint in three years
நான் பிரதமராகப் பொறுப்பு ஏற்று கடந்த 3 ஆண்டுகளில், எனது ஆட்சியில் ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டோ, ஊழல் கறையோ கிடையாது என்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெருமிதத்தோடு பிரதம் மோடி பேசினார்.
அமெரிக்க பயணம்
அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனுக்கு நேற்றுமுன்தினம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் விர்ஜினியா நகரில் 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது-
உழலை வெறுக்கிறார்கள்
இந்தியாவில் கடந்த கால அரசுகள் நீக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமே ஊழல்தான். இந்தியாவும், மக்களும் ஊழலை வெறுக்கிறார்கள். இந்தியாவை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்ல தொடர்ந்து என்னுடைய அரசு பாடுபடும் என்று உங்களிடம் உறுதி அளிக்கிறேன்.
ஊழலை கறை இல்லை
நான் பிரதமராகப் பதவி ஏற்று கடந்த 3 ஆண்டுகளில், எந்த திட்டமாக, வேலையாக இருந்தாலும் எனது அரசு பணிவுடன் மக்களுக்கு செய்துள்ளது. இப்போது வரை என்னுடைய அரசின் மீது எந்தவிதமான ஊழல் கறையோ அல்லது ஊழல் குற்றச்சாட்டோ இல்லை
தொழில்நுட்பம்
இதற்கு முக்கியக்காரணம், தொழில்நுட்ப வசதிகளை நிர்வாகத்தில் அதிகமாகப் புகுத்தி, வௌிப்படைத் தன்மை கொண்டுவரப்பட்டது. இதனால், இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளையும் புதிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான பல சாதனைகள் செய்து இருக்கிறோம் என்பதற்கு பல உதாரணங்களை உங்களுக்கு நான் கூற முடியும். நிர்வாகத்துக்கும், வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத்துக்க அதிகமான கவனிப்பும், முக்கியத்துவமும் தரப்படுகிறது.
ஆசையே நிறைவேற்றுவேன்
பல்வேறு துறைகளில் நாடு வேகமாக முன்னேறுவருகிறது. முழுமையான, நிலையான வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. சர்வதேச தரத்தை மையப்படுத்தி, உயர்ந்த தரத்துக்கு வளர்ச்சியை இட்டுச் செல்கிறோம். நாடு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பது, சாமானி மக்களின் ஆசையாக இருக்கிறது. மக்களின் ஆசையை நிறைவேற்ற, எதிர்பார்ப்புக்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
முதலீட்டுக்கு சிறந்த இடம்
அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா ஏராளமாகப் பெற்று வருகிறது. உலகில் உள்ள அனைத்து கடன் தரக்கட்டுப்பாட்டு அமைப்புகளும், இந்தியாவுக்கு கொடுக்கும் மதிப்பை, தரத்தை அதிகப்படுத்திஉள்ளன. உலகம் இன்று இந்தியாவை முதலீடு செய்யச் சிறந்த இடமாக நோக்குகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கா, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உதவி செய்து,பணியாற்ற வேண்டும். எப்போதும் இல்லாத வேகத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.
100 கோடி மக்கள்
இந்தியாவில் உள்ள 100 கோடிமக்களும் இப்போது நல்ல, உகந்த சூழல் நிலவுகிறது. அவர்களும் இந்தியாவின் முகத்தை மாற்றி, வேகமான வளர்ச்சிக்காக உதவுகிறார்கள். அமெரிக்க இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்ற நான் உழைப்பேன் என உறுதி கூறுகிறேன், நீங்களும் நாட்டின் வளர்ச்சியை பார்ப்பீர்கள்
இவ்வாறு அவர் பேசினார்.
