பிரதமர் திரு.நரேந்திரமோடி அரசு முறைப் பயணமாக இன்று ஜப்பானுக்‍கு புறப்பட்டார். ஜப்பான் செல்லும் வழியில் தாய்லாந்து சென்ற பிரதமர், மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலுக்‍கு மரியாதை செலுத்தினார். 

கடந்த ஆண்டு ஜப்பான் பிரதமர் Shinzo Abe இந்தியா வந்தபோது, பல்வேறு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் திரு.நரேந்திரமோடி, இதற்காக உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இன்று டெல்லியில் இருந்து அவர் ஜப்பான் புறப்பட்டார்.

ஜப்பான் செல்லும் வழியில் தாய்லாந்து சென்ற பிரதமர் திரு.நரேந்திரமோடி, அங்கு மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலுக்‍கு மரியாதை செலுத்தினார்.

பிரதமர் தனது 3 நாள் ஜப்பான் பயணத்தின்போது, வருடாந்திர உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் Shinzo Abe-யை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் அந்நாட்டு மன்னரையும் திரு.மோடி சந்திக்‍கிறார். இந்த சந்திப்பின்போது, சிவில் அணுசக்‍தி ஒத்துழைப்பு தொடர்பான முக்‍கிய ஒப்பந்தத்தில் திரு.மோடி கையெழுத்திடவுள்ளார். இதேபோல், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட மற்ற துறைகள் தொடர்பாகவும் இருதரப்பிலும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.