அல்லாஹு அக்பர் கோஷத்துடன் யூதர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கும்பல்.. ரஷ்ய விமான நிலையம் முற்றுகை.. பரபரப்பு..
விமான நிலையத்திற்குள் பாலஸ்தீனிய கொடிகளை ஏந்திய அந்த கும்பல், இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அல்லது யூதர்கள் என்று நினைத்த பயணிகளை தாக்கியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தாகெஸ்தான் மாகாணத்தில் உள்ள ரஷ்ய நகரமான மகச்சலாவில் உள்ள விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை ஒரு கும்பல் முற்றுகையிட்டது, இஸ்ரேலில் இருந்து ஒரு விமானம் வருவதாக வதந்தி பரவியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. விமான நிலையத்திற்குள் பாலஸ்தீனிய கொடிகளை ஏந்திய அந்த கும்பல், இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அல்லது யூதர்கள் என்று நினைத்த பயணிகளை தாக்கியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்கள் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த கும்பல் கோரியதாகவும் கூறப்படுகிறது..
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தாகெஸ்தான் கவர்னர் உறுதியளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் யூத குடிமக்களை ரஷ்யா பாதுகாக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள முஸ்லீம்கள் இஸ்ரேலில் இருந்து விமானம் வந்து கொண்டிருக்கும் விமான நிலையத்தை புயலால் தாக்கினர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த கும்பலில் இருந்த பலர் "அல்லாஹு அக்பர்"என்று கோஷமிட்டனர், அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு, கதவுகள் மற்றும் தடைகளை உடைத்து, இஸ்ரேலியர்களையும் யூதர்களையும் ஏற்றிச் செல்லும் விமானத்தின் முன் எதிர்ப்பு தெரிவித்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த வன்முறை வெடித்துள்ளது. மேலும் விமான நிலையத்தில் கூடியவர்களில் பலர் யூதர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை வைத்திருந்தனர். அதில் "தாகெஸ்தானில் குழந்தைகளைக் கொலை செய்பவர்களுக்கு இடமில்லை" என்ற வாசகப் பலகையை ஒரு எதிர்ப்பாளர் வைத்திருப்பதை வீடியோக்களில் காணலாம்.
இதுதொடர்பான பல வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் விமான நிலைய முனையத்திற்குள் ஒரு கூட்டம் நுழையும் போது, ஊழியர்கள் அவர்களைத் தடுக்க முயல்வதையும், அவர்கள் கதவுகளை உடைக்க முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.
காசாவில் இப்போதைக்கு போர்நிறுத்தம் கிடையாது... இஸ்ரேல் திட்டவட்டம்! பலி எண்ணிக்கை 8000 ஐ தாண்டியது
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்
அக்டோபர் 7 அன்று காசா எல்லையைத் தாண்டி ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலின் வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும் மற்றும் 230 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் கடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்தி வரும் பதிலடி தாக்குதலில் இதுவரை 8000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இர்களில் பாதி குழந்தைகள் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாகெஸ்தான் மற்றும் செச்னியா இரண்டு மாகாணங்களும் முஸ்லீம் அதிகமாக வசிக்கும் பகுதிகளாகும். தாகெஸ்தான் ரஷ்யாவின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாகும். உக்ரைன் உடனான போரில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமாக பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.