பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்த உத்தரவு போட்ட மசூதி: 400 வீடுகளுக்குத் தீ வைப்பு
பாகிஸ்தான் நாட்டின் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை தனக்கு நேர்ந்த துயரத்தை தெளிவாக விவரித்து உதவி கேட்கிறார்.
பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழமை காலையும் லாகூரில் உள்ள ஒரு மசூதியில் இருந்து கிறிஸ்தவர்களைத் தாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன், பைசலாபாத் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களை மிரட்டும் வகையில் உருது மொழி வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
லாகூரில் உள்ள ஷேக்பூர் பகுதியில் இன்று காலை கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் உள்ளூர் மக்களுடன் சண்டையிட்டார். அதன் பிறகு அங்குள்ள உள்ளூர் மசூதியில் இருந்து முஸ்லிம்கள் ஒன்று கூடி கிறிஸ்தவர்களைத் தாக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், தாக்குதலுக்கு அஞ்சி அப்பகுதி கிறிஸ்தவ சமூகத்தினர் அலறி அடித்த ஓடத் தொடங்கியுள்ளனர். பலர் தங்கள் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி 9 வருஷமா ஒரு நாள் கூட லீவு எடுக்கலயாம்! உழைத்துக்கொண்டே இருக்கிறாராம்!
ஒரு வீடியோவில், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்து உதவி கேட்டுள்ளார். "பைசலாபாத் ரஹ்மத் டவுன் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் வெளிப்புறச் சுவரில் முகமது அல்லாஹ்வின் பெயருடன் வாசகங்கள் எழுதப்பட்டன. தேவாலயத்தின் சுவரில் எழுதப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் பெயரை நீக்கினால் அவர்கள் அல்லாவை அவமதித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதுதான் பிரச்சனை. கிறிஸ்தவ சமூகத்தினர் இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்களைக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள்" வீடியோவில் பேசும் நபர் முறையிடுகிறார்.
முன்னதாக, ஜரன்வாலா நகரில் 20 கிறிஸ்தவ தேவாலயங்கள் முஸ்லிம்களால் எரிக்கப்பட்டன. கிறிஸ்தவர்களின் 400 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்டன. வீடியோக்களை வெளியிட்டு உதவி கேட்ட, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
தேவாலயங்கள் மற்றும் வீடுகள் எரிக்கப்படுகின்றன. இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும், ஒட்டுமொத்த பாகிஸ்தான் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்று காலை லாகூரில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.