Happy Teacher Day 2023: உங்களுக்குப் பிடித்த ஆசிரியருக்கு என்ன பரிசு கொடுக்கப் போறீங்க? அட்டகாசமான 10 ஐடியா!
ஆசிரியர்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் நாள் தான் ஆசிரியர் தினம். அது கல்வி கொடை அளிக்கும் ஆசிரியர்களை இதயப்பூர்வமாகக் கொண்டாடி மகிழும் நாள். மாணவ மாணவிகள் ஆசிரியரிடம் நன்றியை வெளிப்படுத்தும் வகையில், அழகான பரிசுகளைக் கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துகளைச் சொல்லலாம்.
1. வாழ்த்து அட்டைகள்
கைகளால் வரைந்து வடிவமைத்த வாழ்த்து அட்டைகள் அழகான அன்பின் வெளிப்பாடாக இருக்கும். வாழ்த்து அட்டையில் எழுதும் குறிப்பில் உங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தலாம். அதில் எழுதும் வார்த்தைகள் மனதுக்குப் பிடித்த ஆசிரியர் என்றும் மறக்க முடியாதவையாக மாறிவிடும்.
2. நோட்பேடுகள்
பிரத்யேகமாக வடிவமைத்த நோட்புக் அல்லது நோட்பேட் வழங்கலாம். ஆசிரியர்கள் தினமும் தங்கள் மேசையில் வைத்து பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக இது இருக்கும். ஆசிரியர்கள் தினமும் எடுக்கும் குறிப்புகளுக்கு இந்த நோட்பேடுகள் பயன்படுத்தப்படலாம்.
3. பிளாஸ்க், டம்ளர், தண்ணீர் பாட்டில்
பயணங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வண்ணமயமான, கைக்கு அடக்கமான பிளாஸ்க், டம்ளர், போன்றவற்றை வழங்கலாம். பயணம் மேற்கொள்ளும்போது அவற்றை பயன்படுத்துவது ஸ்டைலாகவும் வசதியாகும் இருக்கும். எங்கும் எடுத்துச் செல்லக்கூடியவையாக இருக்கும்.
4. கீ-செயின்
ஆசிரியர் தினமும் வந்து செல்லும் பைக் அல்லது காரின் சாவியை அலங்கரிக்க விதவிதமான கீ செயின்களை வழங்கலாம். ஆசிரியர் விரும்பக்கூடிய வகையில் புதுமையான கீ செயின்களை உருவாக்கிக் கொடுக்கலாம்.
5. பென் பென்சில் ஹோல்டர்
பேனா, பென்சில் போன்ற தினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக்கொள்ள ஒரு பென் பென்சில் ஹோல்டர் வழங்கலாம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மக் (Mag) வழங்குவதும் ஒரு சிறந்த பரிசாக இருக்கும். இது ஆசிரியர்களை ஈர்க்கும் ஒரு சிறந்த பரிசாக இருக்கும். மேலும், அவர்களுடைய மேசையை நீட்டாக வைத்துக்கொள்ள இது உதவுகிறது.
6. புத்தகங்கள்
ஆசிரியர்களுக்குப் பிடித்த புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கலாம். பிடித்தமான ஒரு புத்தகத்தைப் பரிசளிப்பதன் மூலம் ஆசிரியரை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தலாம். அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக பாதுகாத்து வைப்பார்கள். எப்போதும் நினைவில் நிற்கும் பரிசாக இருக்கும்.
7. பேப்பர்வெயிட்
ஆசிரியர்கள் பல விதமான காகிதங்களை, கோப்புகளை பயன்படுத்துவார்கள். தேர்வுகள் முடிந்தபின் திருத்தவேண்டிய விடைத்தாள்களும் இருக்கும். அவை காற்றில் பறந்துவிடாமல் ஒரு இடத்தில் பத்திரமாக அடுக்க வைக்க, பேப்பர்வெயிட் பயனுள்ளதாக இருக்கும்.
8. போட்டோ ஆல்பம்
பல்வேறு அழகான தருணங்களில் ஆசிரியருடன் எடுத்துக்கொண்ட படங்களை வைத்து போட்டோ ஆல்பம் ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கலாம். பள்ளியில் விழாக்கள், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகள், கல்விச் சுற்றுலாவில் கண்டுகளித்த இடங்களில் எடுத்த படங்கள் ஆகியவற்றை தொகுத்து இந்த ஆல்பத்தை உருவாக்கலாம்.
9. சாக்லெட் மற்றும் இனிப்புகள்
ஆசிரியர் தினத்தை இனிமையானதாக மாற்ற சுவையான இனிப்பு வகைகள், சாக்லெட்டுகள் போன்றவற்றை பரிசாகக் கொடுக்கலாம். மகிழ்ச்சியான நாளை கொண்டாட இது ஒரு எளிமையான வழியாக இருக்கும்.
10. அலங்கார செடிகள்
ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்க்கும் குரோட்டன் செடியைப் பரிசாக அளிக்கலாம். ஆசிரியர் தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இயற்கையின் அழகை உணரும் வகையில் அமையும். அந்தக் குட்டிச் செடி படிப்படியாக வளர்வதை பார்ப்பதும் சுவாரஸ்யமானதாக தருணங்களை உருவாக்கிக் கொடுக்கும்.