Breaking : அமெரிக்காவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!
அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்..
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 9.3 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கம் அலாஸ்கா தீபகற்பம், அலுடியன் தீவுகள் மற்றும் குக் இன்லெட் பகுதிகளில் உணரப்பட்டதாக அலாஸ்கா பூகம்ப மையம் தெரிவித்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த 1964ம் ஆண்டு மார்ச் மாதம் அலாஸ்கா பயங்கரமான 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இது வட அமெரிக்காவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வலிமையான நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிதீவிர நிலநடுக்கம் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் சுனாமியை ஏற்படுத்தியது.
1964ம் ஆண்டு நடந்த அந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆஸி.,யில் இந்திய மாணவரை இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதிகள்