மார்க் ஜூக்கர்பெர்க் மனைவி பிரிசில்லாவின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, அமெரிக்கப் பாடகர் பென்சன் பூன் பாணியில் நீல நிற ஜம்ப்சூட் அணிந்து சர்ப்ரைஸ் அளித்தார். கருப்பு உடையை கிழித்து, பூன் போல மாறிய ஜுக்கர்பெர்க்கின் செயல் விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோவை ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

மார்க் ஜுக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா சானின் பிறந்தநாள் விழாவிற்கு மிகவும் எதிர்பாராத ஒன்றைச் செய்து அசத்தி இருக்கிறார். மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் பிரபல அமெரிக்கப் பாடகர் பென்சன் பூன் போல பளபளப்பான ஆடை அணிந்து வந்து மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

மனைவியின் 40வது பிறந்தநாள் விழாவுக்காக ஸ்பெஷல் பிளான் செய்திருந்த அவர் கிராமி விருது பெற்ற அமெரிக்கப் பாடகர் பென்சன் பூன் அணிந்ததைப் போல நீல நிறத்தில் ஜம்ப்சூட் அணிந்த அரங்கில் தோன்றினார். அவரது புதிய தோற்றம் பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, மார்க்கின் மனைவி பிரிஸ்சில்லா கணவரின் வேஷத்தைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தார்.

பிரிஸ்சில்லாவின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஜுக்கர்பெர்க் முதலில் ஒரு கருப்பு நிற ஆடையில் தோன்றி, அதைக் கிழித்துக்கொண்டு பூன் ஸ்டைலுக்கு மாறுகிறார். கிராமி விருது விழாவில் பூன் அணிந்திருந்தது போன்ற ஜம்ப்சூட்டுடன் தனது மனைவிக்கு வாழ்த்து கூறுகிறார்.

தங்கத்தை எந்த வடிவத்தில் வாங்கினால் அதிக லாபம்? முதலீட்டாளர்கள் இதை ட்ரை பண்ணுங்க!

மனைவியின் 40வது பிறந்தநாள்! ஆடி, பாடி கொண்டாடிய மார்க் ஜுக்கர்பெர்க்! #markzuckerberg #zuckerberg

"மனைவி 40வது பிறந்தநாள். இதுபோன்ற சந்தர்ப்பம் ஒருமுறைதான் கிடைக்கும். இந்த புதிய ஜம்ப்சூட் மற்றும் சிங்கிளுக்காக பென்சன் பூனுக்கு நன்றி" என்று ஜுக்கர்பெர்க் தனது பதிவில் கூறியுள்ளார். அவர் பகிர்ந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த மாதம் கிராமி விருது விழாவில் பூன் நீல நிற உடையில் தோன்றியது அனைவரையும் கவர்ந்தது. விருது விழாவில் பூன் அணிந்திருந்த அதே ஜம்ப்சூட்டையே ஜுக்கர்பெர்க்கும் அணிந்திருந்ததை மெட்டா ஊழியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரிசில்லாவும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள அவர், இந்தக் கொண்டாட்டம் தனது கணவரின் ஆச்சரியமான செயல்திறனைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

2025 மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை? முழுப் பட்டியல் இதோ!