MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கத்தை எந்த வடிவத்தில் வாங்கினால் அதிக லாபம்? முதலீட்டாளர்கள் இதை ட்ரை பண்ணுங்க!

தங்கத்தை எந்த வடிவத்தில் வாங்கினால் அதிக லாபம்? முதலீட்டாளர்கள் இதை ட்ரை பண்ணுங்க!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் முதலீட்டுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் மாற்று வழிகளைத் தேடுகிறார்கள். அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்ய என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று பார்க்கலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Mar 01 2025, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Investment in Gold

Investment in Gold

பெரும்பாலும் எல்லா குடும்பத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் தங்கம் இருக்கும். மக்கள் தங்கத்தை சிறந்த முதலீடாகவும் பார்க்கிறார்கள். இதனால் பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற முக்கிய நாட்கள் வரும்போது தங்கம் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்போது, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிக அளவு முதலீட்டை தங்கத்தில் போடுகிறார்கள். இந்நிலையில் தங்கம் வாங்குபவர்கள் வழக்கமான ஆபரணத் தங்கம் தவிர வேறு என்னெ்ன வகைகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Gold Savings Schemes

Gold Savings Schemes

பல நகைக்கடைக்காரர்கள் தங்க சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். தங்கம் அல்லது நகைச் சேமிப்புத் திட்டங்களில், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தொகையை மாதம்தோறும் டெபாசிட் செய்ய வேண்டும்.

காலக்கெடு முடிந்ததும், போனஸ் தொகை உட்பட டெபாசிட் செய்யப்பட்ட மொத்தப் பணத்துக்குச் சமமான மதிப்பில் தங்கத்தை (அதே நகைக்கடைக்காரரிடம்) வாங்கலாம். கூடவே பரிசுப் பொருளைக் கூட சில கடைகளில் வழங்குகிறார்கள்.

36
Gold Coins

Gold Coins

தங்க நாணயங்களை நகைக்கடைகள், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் இப்போது இ-காமர்ஸ் இணையதளங்களில் கூட வாங்கலாம். 24 காரட் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் 999 நேர்த்தியுடன் கிடைக்கின்றன. தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அனைத்தும் BIS தரநிலைகளின்படி ஹால்மார்க் செய்யப்படும்.

இவற்றை வாங்கும்போது, சேதம் அடையாத வகையில் பேக் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வது நல்லது. 0.5 கிராம் முதல் 50 கிராம் வரை எடையுள்ள தங்க நாணயங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், நகைக்கடைக்காரரிடம் வாங்கும் தங்கத்தின் எடையை சரிபார்க்க வேண்டும்.

46
Sovereign Gold Bonds

Sovereign Gold Bonds

தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds) அரசாங்கத்தால் வெளியிடப்படுகின்றன. ஆனால் அரசாங்கம் இதனை எப்போதாதவது தான் விற்பனை செய்யும். ஒரு வருடத்தில் இரண்டு முறை ஒரு வார காலம் தங்கப் பத்திர விற்பனை நடக்கும். எப்போது வேண்டுமானாலும் தங்கம் வாங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, வேறு வழிகளில் தங்கத்தை வாங்குவதே சிறந்த வழி.

56
Digital Gold

Digital Gold

Paytm, PhonePe, Google Pay போன்ற பேமெண்ட் அப்ளிகேஷன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். இந்த டிஜிட்டல் தங்கம் ஒரு ரூபாய் முதல் கிடைக்கிறது! பெரும்பாலான பேமெண்ட் ஆப் நிறுவனங்கள் SafeGold உடன் இணைந்து டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்கின்றன.

66
Gold ETF

Gold ETF

மிகவும் செலவு குறைந்த முறையில் காகிதத் தங்கத்தை வாங்குவதற்குரிய மாற்று வழி தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள்  எனப்படும் தங்க ஈடிஎஃப் (ETF). இத்தகைய முதலீடுகள் (வாங்குதல் மற்றும் விற்பனை) பங்குச்சந்தையில் (NSE அல்லது BSE) தங்கத்தை அடிப்படைச் சொத்தாகக் கொண்டு நடக்கும்.

இதன் விலையில் காணப்படும் வெளிப்படைத்தன்மை இதில் உள்ள மற்றொரு நல்ல அம்சம். இதன் விலை தங்கத்தின் உண்மையான விலைக்கு மிக நெருக்கமானதாக இருக்கும். தங்க ஈடிஎஃப்பில் முதலீடு செய்ய, பங்குத் தரகருடன் வர்த்தகக் கணக்கும் டிமேட் கணக்கும் வேண்டும். முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP) மூலம் ஒருவர் மொத்தமாகவோ அல்லது சீரான இடைவெளியிலோ வாங்கலாம்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stock Market Today: பங்குச்சந்தையில் இன்று என்ன நடக்கும்? சென்செக்ஸ், நிஃப்டி முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
Recommended image2
Gold Adulteration Scam: 22 கேரட் தங்கத்திலும் கலப்படமா..? இயந்திரத்தையே ஏமாற்றிய சீன பவுடர்..!
Recommended image3
ஐபோனுக்கு ரூ.23,000 தள்ளுபடி, இலவச சினிமா டிக்கெட்: ஏர்டெல் அறிவித்த அதிரடி இன்சைடர் சலுகைகள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved