தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி... முன்னாள் போலீஸ் அதிகாரி வெறிச் செயல்.
தாய்லாந்து வட கிழக்கு மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 34 பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் வீட்டிற்குள் சென்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றதுடன், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் பரவலாக இருந்து வருகின்றது. இந்த வரிசையில் தெற்காசிய நாடான தாய்லாந்தில் தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்குள் நுழைந்து மர்ம நபர் குழந்தைகளின் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள ஒரு பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த இரண்டு முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் 22 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்த தனது வாகனத்தில் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
long bua lam phu மாகாணத்தில்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது என தேசிய காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பெயர் பன்யா காம்ராப் என்பதும், அவர் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கடந்த ஆண்டு காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும், அவர் காவல்துறையினர் லெப்டினன்ட் கர்னனால பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்: கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை; தனது தாய் சோனியா காந்தியை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிய ராகுல் காந்தி!!
இந்த துப்பாக்கிச் சூட்டால் தாய்லாந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்த நிலையில் அவர் வீட்டுக்கு சென்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக தலைநகர் பாங்காங்கில் உள்ள ராணுவ பயிற்சிக் கூடத்தில் பணியாற்றிய ராணுவ அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் கடந்த மாதம் அரங்கேறியது. அச் சம்பவம் நடந்தது ஒரு மாதத்திற்குள் தற்போது இந்த கொடூரம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள்: இனி உங்கள் மாநில நம்பர் பிளேட் தேவையில்லை..வந்துவிட்டது புதிய பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்!
பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும்போது தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவரின் விகிதம் அதிகமாக உள்ளது. ஆனாலும் அங்கு பொதுமக்கள் மீதான துப்பாக்கிச்சூடு என்பது குறைவாகவே இருந்தது, இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சொத்து தகராறில் ஒரு ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலியாகினர். 57 பேர் காயமடைந்தனர் அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.