கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை; தனது தாய் சோனியா காந்தியை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிய ராகுல் காந்தி!!
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று தனது மகனும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் கர்நாடகாவில் கலந்து கொண்டுள்ளார். சிறிது தூரம் யாத்திரையில் நடந்த சோனியா காந்தியை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றினார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று கர்நாடகாவில் தனது மகனும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டுள்ளார். இவருடன் கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமாரும் மற்ற காங்கிரஸ் தலைவரும் பங்கேற்றுள்ளனர். காரில் சென்று கொண்டிருந்த சோனியா காந்தி திடீரென இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார்.
தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் எந்த பெரிய நிகழ்வுகளிலும் சமீபத்தில் பங்கேற்காமல் இருந்தார். முதன் முறையாக இன்று கர்நாடகாவில் மாண்டியாவில் துவங்கும் யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டுள்ளார். காரில் செல்வதற்கு முன்பு சோனியா காந்தி சிறிது தூரம் தொண்டர்களுடன் நடந்து சென்றார்.
யாத்திரையில் கலந்து கொள்வதற்கு முன்பு சோனியா காந்தி, பெகுரில் இருக்கும் கோவிலுக்கு சென்று சாமி வழிபாடு செய்தார். இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் கர்நாடகா மாநிலம் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய மாநிலமாக இருக்கிறது. இதனால், பெல்லாரியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் யாத்திரைக்கு இடையே நடக்கும் காங்கிரஸ் கூட்டத்திலும் சோனியா காந்தி பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இனி உங்கள் மாநில நம்பர் பிளேட் தேவையில்லை..வந்துவிட்டது புதிய பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்!
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து யாத்திரையை ராகுல் காந்தி துவக்கினார். செப்டம்பர் 30ஆம் தேதி கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைந்தார். இந்த நிலையில், யாத்திரையில் கலந்து கொள்வதற்கு மைசூருக்கு கடந்த திங்கள் கிழமை சோனியா காந்தி வந்தார். இவரை காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமார் வரவேற்றார். செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என்பதால், யாத்திரை நடைபெறவில்லை. யாத்திரையில் சோனியா காந்தி கலந்து கொண்டு இருப்பது கட்சிக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. விஜயதசமிக்கு பின்னர் கர்நாடகாவில் விஜயா இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் கர்நாடகாவில் சோனியா காந்தி யாத்திரையில் கலந்து கொண்டுள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். பாஜக தனது கடையை மூடப் போகிறது'' என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.
சிறிது தூரம் யாத்திரையில் தொண்டர்களுடன் நடந்து சென்ற சோனியா காந்தியை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றினார் ராகுல் காந்தி. சோனியா காந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், நீண்ட தூரம் நடப்பதற்கு ராகுல் காந்தி தனது தாயை அனுமதிக்கவில்லை.