Asianet News TamilAsianet News Tamil

வெளிநாடுகளில் கைதாகும் பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்!

வெளிநாடுகளில் கைது செய்யப்படும் பிச்சைக்காரர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Majority Of Beggars Arrested Abroad Are From Crisis-Hit Pakistan: Report  sgb
Author
First Published Sep 30, 2023, 10:21 AM IST | Last Updated Sep 30, 2023, 11:39 AM IST

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அந்த நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் பிச்சைக்காரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுக்கான செனட் ஸ்டாண்டிங் கமிட்டிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து தொழிலாளர் இடம்பெயர்வு பிரச்சினை குறித்து செனட் குழுவில் நடந்த விவாதத்தின்போது, வெளிநாட்டு அமைச்சக செயலாளர் சுல்பிகர் ஹைதர் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார் என்று பாகிஸ்தான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து அதிகமான பிச்சைக்காரர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதால், அந்நாட்டில் ஆள் கடத்தல் பிரச்சனை மோசமாகி வருகிறது. இந்த பிச்சைக்காரர்கள் சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்குள் நுழைவதற்காக சுற்றுலா விசாக்களை பயன்படுத்திக் கொள்வதாக ஹைதர் தெரிவித்துள்ளார்.

தொடர் வைப்புநிதி சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 6.7 சதவீதமாக உயர்வு: நிதி அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்கள் ஜப்பானுக்கு பறக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் அவர் கூறியுள்ளார். ஹராம் போன்ற புனிதத் தலங்களுக்குள் பிடிபட்ட பிக்பாக்கெட்டுகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்றும் அவர் கூறினார்.

Majority Of Beggars Arrested Abroad Are From Crisis-Hit Pakistan: Report  sgb

பிச்சைக்காரர்கள் பெரும்பாலும் உம்ரா விசாவில் செல்கிறார்கள், அவர்களுக்கு வேலை விசா கிடைக்காது என்றும் அவர் கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் தெரியவருகிறது. இப்படி புலம்பெயரும் மக்களுக்கு ஜப்பான் புதிய புகலிடமாக மாறியுள்ளதாகவும் சவுதி அரேபியா இப்போது பயிற்சி பெறாத தொழிலாளர்களை விட திறமையான தொழிலாளர்களையே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செனட்டர் ஹசன் மத்திய கிழக்கு நாடுகளில் பாகிஸ்தானியர்கள் பற்றிப் பேசுகையில், சவூதி அரேபியாவில் சுமார் 30 லட்சம் பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 15 லட்சம் பேரும் கத்தாரில் தோராயமாக 2 லட்சம் பேரும் இருப்பதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பொறியாளர்கள் ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்றும் ஹைதர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானில் திறமையான தொழில் வல்லுநர்கள் தற்போது மாதத்திற்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை குறைந்த சம்பளத்தை ஏற்கத் தயாராக உள்ளனர். அவர்களில் சிலர் பரவலான பணவீக்கம் மற்றும் மந்தநிலை காரணமாக வேலைவாய்ப்பு விசாக்களுக்கு கணிசமான தொகையை செலுத்த தயாராக உள்ளனர்.

குழந்தைகளுடன் தீக்குளித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்! அதிர்ச்சியில் உயிரை விட்ட தந்தை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios