தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. அவற்றில் கட்டிடங்கள் குலுங்கும் காட்சியைக் காணமுடிகிறது.

Scroll to load tweet…

ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் திங்கள்கிழமை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 37 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் EMSC கூறியுள்ளது.

ஜப்பான் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். ஆனால் சேதத்தின் முழு அளவு இந்த நேரத்தில் தெளிவாகத் தெரியவில்லை. உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான், பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் நெருப்பு வளையம் எனப்படும் 'ரிங் ஆஃப் ஃபயர்' பகுதியில் அமைந்துள்ளது. அங்கு உள்ள டெக்டோனிக் தட்டுகளின் நிலை காரணமாக, நிலநடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஜப்பான் உலகிலேயே அதிக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்; 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.1,056 கோடி விடுவிக்க கோரிக்கை