Asianet News TamilAsianet News Tamil

ஃபிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. 

magnitude 6.3 earthquake strikes at philippines
Author
First Published Apr 4, 2023, 10:37 PM IST

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்சின் விகா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததை அடுத்து மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதையும் படிங்க: நேட்டோவில் இணைந்த பின்லாந்து.. ரஷ்யா என்ன செய்யப்போகுதோ.! பதறும் உலக நாடுகள்

இந்த நிலநடுக்கம் விகா நகரத்தில் இருந்து 125 கி.மீட்டர் தொலைவில் 45 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக நேற்று தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: வங்கதேசத்தில் பயங்கர தீவிபத்து... தீக்கிரையான துணிச்சந்தை... பல லட்ச மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!!

இந்திய நேரப்படி நேற்று இரவு 8.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ராவின் படங்சிடெம்புவான் நகரின் தென்மேற்கே கடலில் 84 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு ஏற்பட்டு இருந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios