ஜெர்மன் நாட்டில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் காயமடைந்தனர்.
ஜெர்மன் நாட்டில் பிராங்க்பர்ட் அருகில் உள்ள லுட்விக்ஷாபென் என்ற இடத்தில் உலகின் மிகப்பெரிய ஆலையான ‘பி.ஏ.எஸ்.எப்.’ ரசாயன ஆலை செயல்படுகிறது. 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த ஆலையில் 39 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.
இந்திய நேரப்படி நேற்று மாலை சுமார் 3 மணியளவில் அங்கு குழாய்களில் வேலை நடந்து கொண்டிருந்த்து. அப்போது, அங்கிருந்த ரசாயன குழாய் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
அப்போது, அங்கு வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். சிலர் மாயமாகிவிட்டனர்.
இந்த திடீர் விபத்தால், அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், வெளியே வரவேண்டாம் எனவும், கதவு, ஜன்னல்களை மூடிவைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அந்த ஆலையின் மற்றொரு யூனிட்டிலும் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயமடைந்தனர்.
