அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய லாரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அது தற்போது 50,000 லிட்டர் பீரை சப்ளை செய்துள்ளது.
தற்போது உலகயே புரட்டிப் போடும் அளவிருக்கு தற்போது நவீன கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி மேலோங்கி நிற்கின்றது. நவீன மொபைல் வளர்ச்சி, தானாக இயங்கக் கூடிய கார், ரோபோ என விஞ்ஞானம் விண்ணை நோக்கி பாய்கின்றது. இதற்கிடையில் தற்போது டிரைவர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய லாரியும் கண்டு பிடித்து விட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் தானாக ஓடக்கூடிய லாரி தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஓட்டோ’ என அழைக்கப்படும் அந்த லாரி சமீபத்தில் அமெரிக்காவில் தானாக ஓடி பீர்கேன்கள் சப்ளை செய்துள்ளது. அமெரிக்காவின் கொலரோயாவில் இருந்து கொலரோடா ஸ்பிரிங்ஸ் என்ற இடத்துக்கு 50,000 லிட்டர் கேன் பீரையும் சப்ளை செய்துள்ளது அந்த லாரி.
120 மைல் கடந்த இந்த லாரி வர்த்தக துறையில் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. இதில் வழிகாட்டும் காமிராக்கள், ரேடார் மற்றும் சென்சர் எனப்படும் உணர்வுக்கருவிகள் சாலையின் வழிகளை பார்க்க பொருத்தப்பட்டுள்ளது. உபெர் மற்றும் அன்கியுசர் புஸ்க் நிறுவனத்தினர் டிரைவர் இன்றி ஓடும் இந்த லாரியை தயாரித்துள்ளனர்.
