அடேங்கப்பா..! எறும்பு போட்டோவா இது! ரொம்ப பயங்கரமா இருக்கே - இணையத்தில் லைக்ஸ்களை அள்ளும் போட்டோ!

எறும்பு ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பாராட்டை பெற்று வருகிறது.

Lithuanian photographer captures an ant really up close netizens feel creeped out

எறும்புகளை போல் சுறுசுறுப்பாகவும், கூட்டு மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என பள்ளி பாடப்புத்தகத்திலேயே கற்றுத்தரப்படுகிறது. சுவற்றில் ஊர்ந்து செல்லும் எறும்புகளை பார்க்கும் போது இவை எப்படி இப்படி அணிவகுத்து செல்கிறது என்ற எண்ணம் அனைவருக்குமே எழுந்திருக்கும். அதற்கான விடையை கூகுளில் தட்டி படித்திருப்பவர்களும் ஏராளமாக இருக்கலாம்.

இந்நிலையில் எறும்பின் முகத்தை க்ளோஸ் அப் ஷாட்டில் புகைப்படம் பிடித்து அசத்தியிருக்கிறார் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ். நிக்கான் நிறுவனம் நடத்திய (2022 Nikon Small World Photomicrography) போட்டியில் பரிசையும் வென்றிருக்கிறார் அவர்.

Lithuanian photographer captures an ant really up close netizens feel creeped out

இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

இந்த போட்டி நாம் சாதாரண கண்களால் பார்க்க இயலாதவற்றை புகைப்படம் எடுப்பவர்களில் தேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் உலகம் எங்கும் உள்ள புகைப்பட கலைஞர்ள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் இறுதியாக 57 புகைப்பட கலைஞர்கள் எடுத்த புகைப்படம் தேர்வாகி இருந்தது. இதில் யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் மைக்ரோஸ்கோப்பில் எடுத்த புகைப்படம் பரிசை வென்றுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் சிவப்பு நிற கண், தங்கம் போல் தகிக்கும் கொடுக்குகள் இருக்கின்றன. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது.  நிகான் நிறுவனம் கடந்த 48 ஆண்டுகளாக இந்த புகைப்படப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு போட்டிக்கு மொத்தமாக 1300 படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் 57 புகைப்படங்கள் இமேஜஸ் ஆஃப் டிஸ்டின்க்‌ஷன் என்று தேர்வாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios