நிலவில் உள்ள விக்ரம் லேண்டரை மீட்கும் கடைசி முயற்ச்சியாக அதன்மீது ஆர்பிட்டர் மூலம்  மின் ஆற்றலை பாய்ச்சி உயிர்பிக்கும் முயற்ச்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

நிலவில் தரையிறங்க யிருந்த நேரத்தில் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. அது சந்திராயன்2 திட்டத்தில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஆர்பிட்டரின் உதவியுடன் நிலவை ஆராயும் முயற்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மாயமான லேண்டர் என்ன ஆனாது பத்திரமாக இருக்கிறதா இல்லையா, அல்லது நிலவின் தரைப்பகுதியில் மோதி சுக்குநூறாக உடைந்துவிட்டதா என விஞ்ஞானிகள் லேண்டரை தேடிவந்தனர் , இதற்கிடையில் லேண்டர் இருக்குமிடத்தையும் அது பத்திரமாக இருப்பதையும் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பியது. லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தாலும் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை. 

ஆனாலும் 14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந் நிலையில் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்ச்சியில்  விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலவின் தெற்குப் பகுதி மிகவும் ஆபத்தானதும் மர்மம் நிறைந்ததுமானது என்பதால் அங்கு லேண்டர் எளிதில் பாழாவதற்கு வாய்ப்புகள் உள்ளது என ஐரோப்பிய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே லேண்டரை விரைவாக உயிர்பிக்க என்னென்ன வழிகள் உள்ளது என்பது குறித்து தீவிரமாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் லேண்டரின் பெருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் மூலம் சூரிய வெப்பம் கிடைத்து அது செயல்படவேண்டும் என்பதும்  அல்லது ஆர்பிட்டர் மூலமாக லேண்டருக்கு மின் ஒளி அதாவது எலெக்ட்ரிகல் ஷாக் கொடுத்து அதை செயல்பட வைப்பது என இரண்டேஇரண்டு வழிகள் மட்டுமே உள்ளது . 

இந்த நிலையில் சோலார் தகடுகள் செயல்பட முடியாத நிலையில் காலநிலை சூழலுக்கு எதிராக உள்ளது. எனவே லேண்டருக்கு மின் ஆற்றலை பாய்ச்சி அதன் மூலம் தொடர்பை ஏற்படுத்துவதே வரே வழி என்ற முடிவுக்கு வந்துள்ள  இஸ்ரோ விஞ்ஞானிகள் அதற்கான முயற்ச்சியில் இறங்கி உள்ளனர்.  இதிலும் பலன் கிடைக்காமல் போனால் முயற்ச்சியை கைவிடுவதைத் தவிற வேறு வழியில்லை என்று சில  இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனிடையே நிலவில் உள்ள மாசிலிருந்து தன்னை காத்துக்கொள்ள லேண்டர் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக  நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.