கர்ப்பிணி பாடகி மேடையிலேயே சுட்டுக் கொலை…. எங்கு தெரியுமா ?

Lady singer shot dead in pakistan
Lady singer shot dead in pakistan


பாகிஸ்தானில் பெண் பாடகி ஓருவர் அமர்ந்தபடியே பாடியதால் கடுப்பான ரசிகர் ஒருவர் அவர் கர்ப்பிணி  என்றும் பாராமல் மேடையிலேயே சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கங்கா என்ற கிராமத்தில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி  ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சமீனா சாமன்,என்ற 22வயது இளம் பெண் பாடகி மேடையில் அமர்ந்தவாறே பாடிக்கொண்டிருந்தார்.

Lady singer shot dead in pakistan

அப்போது அங்கிருந்த ரசிகர் ஓருவர் பாடகியிடம் எழுந்து நின்று பாடுமாறு கூறினார். அதற்கு தாம் கர்ப்பிணியாக இருப்பதால் நிற்கமுடியாது என்றும் அதனால்தான் அமர்ந்தபடியே பாடுவதாகவும் குறிப்பிட்டார்.

Lady singer shot dead in pakistan

இதனால் ஆத்திரமடைந்த அந்த ரசிகர் ர் திடீரென  பாடகியை துப்பாக்கியால் சுட்டார்.இதில் சமீனா சாமன் மேடையில் மயங்கி விழுந்தார்.  இதையடுத்து பாடகியின் கணவர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அந்தப் பாடகி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கியால் சுட்ட  அந்த ரசிகர்  தாரிக் அகமது என்பது  தற்போது விசாரணையில்  தெரியவந்துளளது. அவரிடம் போலீஸ் விசாரணை  நடத்தி வருகின்றனர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios