பசிபிக் பெருங்கடல் பூமியில் உள்ள தண்ணீர் பகுதியில் ஏறக்குறைய 32 சதவீதம் பகுதியை கொண்டதாகும். 35,853 அடி ஆழத்தை கொண்ட இந்த அமைதிக் கடலில் 25,000 க்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இந்த கடலில் கனிம வளங்களும் அதிகம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் பெட்ரோல், எரிவாயு எடுக்கும் இடமாக உள்ளன.
உலகின் மிகப் பெரிய கடலான பசிபிக் பெருங்கடல் மீது பறப்பதை பெரும்பாலும் விமானங்கள் தவிர்க்கின்றன. இதற்காக சொல்லப்படும் காரணங்கள், பசிபிக் பெருங்கடல் பெயரை கேட்டாலே நமக்குள் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
உலகில் உள்ள ஐந்து பெருங்கடல்களில் மிகப் பெரியதும், ஆழமானதும் பசிபிக் பெருங்கடல் தான். அமைதிப் பெருங்கடல் என வர்ணிக்கப்படும் இது 16.52 கோடி சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. ஆனால் அதாவது பூமியில் அனைத்து கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட இந்த பெருங்கடல் பெரியது. ஆசியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அமைந்துள்ள இந்த பெருங்கடல் செபிபெஸ் கடல், கோரல் கடல், கிழக்கு சீனக்கடல், பிலிப்பைன் கடல், யப்பான் கடல், தென் சீனக்கடல், சுலு கடல், டாஸ்மான் கடல், மஞ்சள் கடல் ஆகிய கடல்களை உள்ளடக்கியது என்றால் அதன் பரப்பளவு எப்படி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
பசிபிக் பெருங்கடலில் தான் தீர்க்க ரேகை எனப்படும் நிலநிரைக்கோடு செல்கிறது. இந்த கடலில் ஏராளமான தீவுக் கூட்டங்கள் உள்ளன. பசிபிக் பெருங்கடலின் மீது முழுவதுமாக பறப்பதற்கான விமானங்கள் மிக மிக குறைவு. பெரும்பாலான விமானங்கள் பசிபிக் பெருங்கடல் மீது பறப்பதை தவிர்த்து விட்டு, பெரிய நிலப்பகுதிகள் மீது பறக்கும் பாதைகளை மட்டுமே தேர்வு செய்கின்றன. சர்வதேச நேரத்தை கணக்கிடும் முக்கிய பகுதியாக விளங்கும் பசிபிக் பெருங்கடல் மீது பறப்பை ஏன் விமானங்கள் தவிர்க்கின்றன என்ற காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
எரிபொருள் :
பசிபிக் பெருங்கடலின் பரந்த நீர்பரப்பை கடக்க அதிகமான எரிபொருள் தேவைப்படும். விமானங்களுக்கு தேவையான எரிபொருளை நிரப்புவதற்காக பயணத்தின் இடையில் இருக்கும் நாடுகளில் தரையிறக்கப்படும். ஆனால் பசிபிக் பெருங்கடலில் விமான நிலையங்கள் இருக்கும் அளவிற்கு தீவுகள் கிடையாது. இதனால் அதிக விமான நிலையங்கள் இருக்கும் தரைப் பகுதியில் இருக்கும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளை தேர்வு செய்து விமானிகள், விமானத்தை இயக்குகிறார்கள்.
பூமியின் அமைப்பு :
பசிபிக் பெருங்கடலை நேராக கடப்பது குறுகிய தூரம் என தோன்றலாம். ஆனால் பூமியின் அமைப்பு உருண்டையாக இருப்பதால் இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை கடப்பது குறுகிய தூரம் கிடையாது. இதனால் தான் பெரும்பாலான வணிக விமானங்கள் வளைந்த பாதைகளை தேர்ந்தெடுக்கின்றன. பெயருக்கு தான் அமைதிக் கடல். ஆனால் ஆபத்து அதிகம் நிறைந்த பகுதியாகும்.ல
வானிலை :
பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் வானிலையை கணிக்க முடியாது. காற்று, புயல், கடல் கொந்தளிப்பு என ஏதாவது ஒன்று திடீரென ஏற்படும். இப்படிப்பட்ட கடல் பரப்பின் மீது நீண்ட தூர விமான பயணத்தை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாகும். அவசரத்திற்கு தரையிறக்க கூட வாய்ப்பு இல்லை என்பதால் ஆபத்துக்களை தவிர்க்க, பசிபிக் பெருங்கடல் பாதையை விமானங்கள் தவிர்க்கின்றன.
பாதுகாப்பு:
பசிபிக் பெருங்கடல் பாதையை விமானங்கள் தவிர்ப்பதற்கு மிக முக்கியமான காரணமே பாதுகாப்பு தான். மருத்துவம், தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணங்கள் ஏற்பட்டால் அவசரமாக தறையிறக்க முடியாது என்பதால் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி விடும் என்பதால் தான் பசிபிக் கடல் மீது பறப்பதை விமானங்கள் தவிர்க்கின்றன.
