Asianet News TamilAsianet News Tamil

டீன் வயதினரை தாக்கும் முத்த நோய்..!! நோய் முற்றியதால் 17 வயது இளம் பெண் மரணம்..!!

உமிழ்நீர் மற்றும் உடல் திரவங்களால் பரவும் ஒருவகை வைரஸ் ஆகும்  இது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மரணத்தை சம்பவிக்கிறது என்ன மருத்துவர்களின் இந்நோய் குறித்து விளக்கம் தெரிவித்துள்ளனர் .  

kiss fever spread in america  now 17 year old girl died for this king of fever
Author
Delhi, First Published Dec 18, 2019, 2:25 PM IST

அமெரிக்காவில் டீன் ஏஜ் பெண்களை அதிகம் தாக்கும் ஒருவகை வைரசால் வரும்   நோய்க்கு 17 வயது சிறுமி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  வீட்டிலிருந்த 17 வயது பெண் திடீரென மயங்கி விழுந்து  இறந்துள்ளார்.   அவரை பரிசோதித்த டாக்டர்கள் முத்த நோய் பாதிப்பால் அவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் . இது பலரையும்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

kiss fever spread in america  now 17 year old girl died for this king of fever

அமெரிக்காவில் இளம் வயதினரை அதிகம் தாக்கக் கூடிய மூளை வீக்க நோய் தான் இப்படி முத்த நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .  இந்த நோய் எப்ஸ்டீன் பார் வைரசால் ஏற்படுகிறது இது பொதுவாக உமிழ்நீர் மற்றும் உடல் திரவங்களால் பரவும் ஒருவகை வைரஸ் ஆகும்  இது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மரணத்தை சம்பவிக்கிறது என்ன மருத்துவர்களின் இந்நோய் குறித்து விளக்கம் தெரிவித்துள்ளனர் .  பெரும்பாலும் மவுத் கிஸ் கொடுக்கும் பொழுது இந்த நோய் அதிகம் பரவுவதால் இதற்கு முத்து நோய் என பெயரிடப்பட்டு இருப்பதாக மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது .  இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த அரியானா ரே டெல்ஃப்ஸ் என்ற 17 வயது பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்து நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து  அவர்  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு எப்ஸ்டீன் வைரஸ் தாக்கம் இருப்பது தெரியவந்தது . 

kiss fever spread in america  now 17 year old girl died for this king of fever

இந்நிலையில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ,  இது குறித்து தெரிவித்துள்ள அந்தப் பெண்ணின் தந்தை அரியானாவில் நிலை மோசமாகி அவள் திடீரென பாத்ரூமில் மயங்கி விழுந்தாள் ,  இதனால் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தோம்  அப்போது அவளது கால்கள் செயலிழந்து போனது .  மூளை செயல் படாதவாறு வீங்கியது தற்போது சிகிச்சை பலனின்றி அவள் இறந்து விட்டாள் அவளின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளோம் என தனது சோகத்தை தெரிவித்துள்ளார் . 

Follow Us:
Download App:
  • android
  • ios