இந்திய விமானி என நினைத்து பாகிஸ்தான் விமானியை அடித்து கொன்ற பாகிஸ்தானியர்கள்!!
இந்திய விமானி என நினைத்து பாகிஸ்தான் விமானியை, காஷ்மீரைச் சேர்ந்த கும்பல் ஒன்று அடித்துக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானி என நினைத்து பாகிஸ்தான் விமானியை, காஷ்மீரைச் சேர்ந்த கும்பல் ஒன்று அடித்துக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானம் ஊடுருவ முயன்றது. அதை இந்திய விமானப் படை விரட்டியது. அப்போது அவர்களின் எப் 16 ரக ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தது.
ஆனால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட, லண்டன் வழக்கறிஞர் காலித் உமர் என்பவர் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.அதில், ‘ பாகிஸ்தானின், எப் 16 ரக ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும் அது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளது. அதில் இருந்த ஷாஜாஸ் உட் தின் என்ற விமானி பாராசூட் மூலம் குதித்துள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்த அவர் பலத்த காயமடைந்திருந்தார். அவரை இந்திய விமானப்படை வீரர் என நினைத்து அங்கு கூடியிருந்த கும்பல் அடித்து தாக்கியுள்ளது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்’ என்றார். தொடர்ந்து பேசியுள்ள அவர், ‘கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவமும், 2 இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்றும் 2 விமானிகள் சிறை பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தது. பின்னர் பிடிபட்டது ஒரு விமானிதான் என்று தெரிவித்தது. இது பாகிஸ்தானிலிருந்து கிடைத்த மீடியா செய்திகள் மற்றும் வீடியோவின் அடிப்படையில் தான் தெரிந்துகொண்டது. பின்னர் அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது’ என்று அவர் கூறியுள்ளார்.