இங்கிலாந்தில் புகழ் பெற்ற இந்திய பெண் மருத்துவர் கொரோனாவுக்கு மரணம்... கலங்க வைக்கும் கடைசி நிமிடங்கள்...!
கடைசி நிமிடம் வரை கடுமையான போராட்டங்களை எதிர்கொண்ட மருத்துவர் பூர்ணிமாவின் மரணம் மருத்துவமனை ஊழியர்களை கண் கலங்க வைத்துள்ளது.
சீனாவில் வுகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 43 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது. இன்னும் இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றுவது மட்டுமே தற்போதைய வழியாக உள்ளது.
கண்ணுக்கு தெரியாத இந்த கொடூர வைரஸிடம் இருந்து மக்களை காப்பதற்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனா தொற்றின் தாக்கத்திற்கு மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!
இந்நிலையில் இங்கிலாந்தில் புகழ் பெற்ற மருத்துவரான பூர்ணிமா நாயர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பூர்ணிமா நாயருக்கு 55 வயதாகிறது. கணவர் மற்றும் ஒரு மகனுடன் இங்கிலாந்தில் வசித்து வந்துள்ளார். கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பூர்ணிமா நாயர் பணியாற்றி வந்துள்ளார். அவரது அசாத்திய திறமை குறுகிய காலத்திலேயே அவரை பேமஸ் மருத்துவராக மாற்றியது.
இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!
கொரோனா பிரச்சனை உச்ச கட்டத்தில் இருப்பதால் எந்த நேரமும் மருத்துவமனையிலேயே இருந்த பூர்ணிமா. கொரோனா நோயாளிகளுக்கு அக்கறையுடன் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மருத்துவர் பூர்ணிமாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டாக்டன் ஆன் டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பூர்ணிமாவை காப்பற்ற மருத்துவர்கள் குழு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!
இறுதி முயற்சியாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி அன்று பூர்ணிமாவிற்கு வென்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவர் பூர்ணிமா நாயர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடைசி நிமிடம் வரை கடுமையான போராட்டங்களை எதிர்கொண்ட மருத்துவர் பூர்ணிமாவின் மரணம் மருத்துவமனை ஊழியர்களை கண் கலங்க வைத்துள்ளது. இந்திய பெண் மருத்துவர் பூர்ணிமா நாயரையும் சேர்ந்து இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.