Asianet News TamilAsianet News Tamil

நேருக்கு நேர் சந்தித்து பேரம் முடித்த பின்னரும் சர்வாதிகாரி என்று ஜி ஜின்பிங்கிற்கு முத்திரை குத்திய ஜோ பைடன்!

தனது நாட்டில் சந்தித்து வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். 

Joe Biden calls Xi Jinping dictator after strike deals for military and AI
Author
First Published Nov 16, 2023, 10:57 AM IST | Last Updated Nov 16, 2023, 10:57 AM IST

அமெரிக்காவில் இருக்கும் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக சந்தித்து பேசினார்.  அப்போது இருநாடுகளின் பொருளாதாரம், ராணுவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருநாடுகளுக்கும் இடையே ராணுவ உயர் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பென்டன்யில்  எதிர்ப்பது என்றும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  

இதையடுத்து செய்தியாளர்களுக்கு ஜோ பைடன் பேட்டி அளித்தார். அப்போது, ''சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவுகளை சரி செய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டோம். நாங்கள் சில முக்கியமான முன்னேற்றங்களை, முடிவுகளை செய்துள்ளோம். 

டிஜிட்டல் உட்கட்டமைப்புடன் உருவாகும் பிரேசிலின் எதிர்கால திட்டங்கள்!

இது இரு நாடுகளுக்கும் இடையிலான தவறான கணக்கீடுகளைத் தடுக்கும். நேரடி ராணுவ தொடர்புகளை மீட்டெடுப்பது குறித்து விவாதித்தோம். தவறான புரிதல்கள் நிகழ்கின்றன. எனவே இருதரப்பிலும், நேரடி, திறந்த, தெளிவான தகவல் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடிவு செய்து  இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உயர்மட்ட ராஜதந்திரத்தைப் பாதுகாக்க இருக்கிறோம். அதிபர் ஜிக்கும் எனக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைய நேரடியான தொலைபேசி அழைப்பில் இருதரப்பிலும் பேசிக் கொள்வது என்று முடிவு செய்து இருக்கிறோம்'' என்றார்.

சீன அதிபரை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு ஜோ பைடன் அளித்த பதிலில், ''சீனாவுடன் தீவிரமாக போட்டியிட அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அந்தப் போட்டியை நாங்கள் பொறுப்புடன் நிர்வகிப்போம். எனவே அது மோதலாகவோ அல்லது தற்செயலான மோதலாகவோ இருக்காது'' என்றார். 

லட்சங்களில் சம்பளம்.. பட்டப்படிப்பு தேவையில்லை.. இங்கிலாந்தில் அதிக சம்பளம் பெறும் வேலைகள் இதோ..

தனது பேட்டியை முடித்துக் கொள்வதற்கு முன்பு, மீண்டும் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று ஜோ பைடன் தெரிவித்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பும் இதேபோன்று சீன அதிபரை சர்வாதிகாரி என்று ஜோ பைடன் வர்ணித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று நேருக்கு நேர் சந்தித்து பேசிய பின்னரும் இதை தெரிவித்தார். '' இங்கே பாருங்கள் ஜி ஜின்பிங் சர்வாதிகாரிதான். ஏன் என்றால் அவர்களது நாடு கம்யூனிஸ்ட் நாடு. நாம் அமைத்து இருக்கும் அரசை விட முற்றிலும் மாறுபட்டது அவர்களது அரசு'' என்று பதில் அளித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios