’அவரு இங்கேதான் இருக்கிறார்...’ அபிநந்தனை அனுப்பி வைத்து விட்டு அதிரடி தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்..!
புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்- இமுகமது அமைப்பின் தலைவர் மசூர் அசாத் பாகிஸ்தானில் உள்ளதை உறுதி செய்திருக்கிறார் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி.
புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்- இமுகமது அமைப்பின் தலைவர் மசூர் அசாத் பாகிஸ்தானில் உள்ளதை உறுதி செய்திருக்கிறார் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ’’ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். இந்தியா அவருக்கு எதிராக சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அவரை உடனடியாக கைது செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது.
எங்களுக்கு கிடைத்த தகவல்படி, அசார் மிகுந்த உடல் நலக் குறைவாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிய வந்துள்ளது. எவ்வித ஆதாரமும் இன்றி, அசார் மீது இந்தியா குற்றம்சாட்டுவதால் மட்டும் கைது செய்ய முடியாது. இந்தியாவிற்கு எதிராக செயல்படும் எந்த அமைப்பையும் பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை. எந்த ஒரு குற்றத்திற்கும், நடவடிக்கைக்கும் தகுந்த ஆவணம் தேவைப்படுகிறது. இது குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சரியான தீர்வை எட்ட முடியும்’’ அவர் தெரிவித்துள்ளார். பிணையக்கைதியாக வைத்திருந்த இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பின் இந்த தகவலை பாகிஸ்தான் தெரிவித்து இருக்கிறது.
புல்வாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 49 பேர் பலியானதற்கு ஜெய்ஷ்- இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.