கல்லறைகளை கடக்கும் போது தங்கள் கட்டை விரலை மறைத்துக் கொள்ளும் ஜப்பானியர்கள்.. ஏன்?
உலகின் பல்வேறு நாடுகளில், அறிவியல் வளர்ச்சி இருந்தபோதிலும், பல மூடநம்பிக்கைகள் இன்னும் பின்பற்றப்படுகின்றன. சாப்ஸ்டிக்குகளை உணவில் குத்துவது முதல் காலணிகளை மேசையில் வைப்பது வரை, இந்த நம்பிக்கைகள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளன.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு கலாச்சாரங்கள் பழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் அறிவிலும் தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சியடைந்துள்ள இந்த காலக்கட்டத்திலும் பல மூட நம்பிக்கைக்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன. உலகின் சில விசித்திரமான மூடநம்பிக்கைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
ஒரு அறையின் வாசலில் முத்தமிட்டால் அல்லது கைகுலுக்கினால், உங்கள் காதலரோ அல்லது நண்பரோ உங்கள் பரம எதிரியாக மாறுவார் என்ற நம்பிக்கை மாஸ்கோவில் உள்ளது. நீங்கள் துடைப்பம் கொண்டு வீட்டை சுத்தம் செய்யும் போது,துடைப்பம் உங்கள் துணையின் பாதத்தைத் தொட்டால், உங்கள் பெற்றோரில் ஒருவர் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை ஆப்கானிஸ்தானில் உள்ளது.
யாரும் ஆகலாம் ஜீரோ டூ ஹீரோ! இவர்களை பாருங்கள்!
சீனா மற்றும் ஜப்பானில், உங்கள் சாப்ஸ்டிக்கை நேராக உங்கள் உணவில் குத்துவது மிகப்பெரிய தவறு. சாப்ஸ்டிக்குகளை உங்கள் கிண்ணத்தில் நேராக வைத்தால் அது மரணத்தை அழைப்பதற்கு சமம். லிதுவேனியாவில், வீட்டிற்குள் விசில் அடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் விசில் சத்தம் பேய்களை வரவழைக்கும் என்று நம்பப்படுகிறது.
காலணிகளை மேசையோடு ஒட்டிப்பது பிரிட்டனில் இது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது ஒரு நேசிப்பவரின் மரணத்தை குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. துருக்கியில், வலது கையை அரித்தால் பணம் வரும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில் இடது கையில் அரித்தால் அதனால் பெரும் பணத்தை இழக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது.
சீனாவின் சில கடலோரப் பகுதிகளில், சமைத்த மீனை திருப்பிப் போடுவது துரதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது, ஏனெனில் இது கப்பல் கவிழ்வதற்கு வழிவகுக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இத்தாலியில், பிரட்டை ஒரு மேசையிலோ அல்லது கூடையிலோ தலைகீழாக வைப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. பிரட் என்பது கிறிஸ்துவின் உடலைக் குறிக்கிறது, எனவே அதை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
திருமணம் செய்யலாமா? பன்றிக்கறி சாப்பிடணும்; லீப் ஆண்டின் வினோத நம்பிக்கைகள்!
ஸ்பெயினிலும் பிற ஸ்பானிய மொழி பேசும் நாடுகளிலும், 13 ஆம் தேதி செவ்வாய்கிழமை, 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.. ஸ்பானிஷ் மொழியில் செவ்வாய், ரோமானிய போர் கடவுளான செவ்வாய் கிரகத்திலிருந்து வருகிறது, இது வன்முறை, மரணத்தை குறிக்கும் நாளாக கருதப்படுகிறது.
ஹங்கேரி மற்றும் ரஷ்யாவில், ஒரு மேசையின் மூலையில் அமர்ந்தால் காதலில் பிரிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை கடைசியாக தாமதாக வரும் நபர் மூலையில் ஒடுக்கிக் கொண்டு அமர்ந்தால் அவருக்கு திருமணம் நடக்காது என்று நம்பப்படுகிறது.
அர்ஜென்டினாவின் புராணக்கதைகளின்படி, ஏழாவது மகன் ஓநாயாக மாறிவிடுவார் என்று ஒரு மூடநம்பிக்கை உள்ளது. எனவே அங்கு 7 குழந்தைகள் பெறக் கூடாது என்ற விதி உள்ளது. ஸ்பெயினில், உங்கள் இடது காலால் ஒரு அறைக்குள் நடப்பது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும். அதற்கு பதிலாக, உங்கள் வலது காலை முதலில் வைக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது..
ஜப்பானில், கல்லறைகளைக் கடந்து செல்லும் போது, உங்கள் கட்டைவிரலை வளைப்பது பொதுவான நடைமுறையாகும்.. ஏனென்றால், கட்டைவிரலுக்கான ஜப்பானிய வார்த்தையானது "பெற்றோர்-விரல்" என்று அழைக்கப்படுகிறது., எனவே அதை மறைப்பது மரணத்திலிருந்து பெற்றோர்களை பாதுகாக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது.