தண்ணீரை சேமிக்க புதிய யோசனை… இணையத்தில் வைரலாகும் ஜப்பானிய கழிவறை!!

கழிப்பறையுடன் கை கழுவும் தொட்டியும் இணைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

japan toilet has a sink attached to it and internet reacts to viral

கழிப்பறையுடன் கை கழுவும் தொட்டியும் இணைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வைரலாகும் இந்த பதிவை ட்விட்டரில் ஃபேசினேட்டிங் என்ற பக்கம் பகிர்ந்துள்ளது. அதில், ஒரு கழிப்பறையில் கை கழுவும் தொட்டி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பயன்படுத்தப்படும் தண்ணீர் ஃப்ளஷ்க்கு மீண்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்பதே இதன் பின்னணியில் இருந்த யோசனை.

இதையும் படிங்க: வருமானவரி விலக்கு குறைப்பு: தனிநபர்வரி, கார்ப்பரேட் வரியை உயர்த்தியது இலங்கை அரசு

இது ஒரு ஜப்பானிய கழிப்பறை. இந்த யோசனை மூலம் ஜப்பான் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரைச் சேமிக்கிறது என்று அந்த டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவிட்டர் பதிவு 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளதோடு நெட்டிசன்களிடமிருந்து ஒரு டன் கமெண்ட்களை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு; பள்ளிகளுக்கு விடுமுறை; பீதியில் மக்கள்!!

மேலும் இந்த புகைப்படங்கள் ஆன்லைனில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த பதிவுக்கு மக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பயணர் ஒருவர், அந்த சிறிய தொட்டி உங்கள் கைகளை கழுவுவதற்கு முற்றிலும் போதுமானதாக இல்லை. தண்ணீர் எல்லா இடங்களிலும் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios