Asianet News TamilAsianet News Tamil

Sri Lanka crisis: வருமானவரி விலக்கு குறைப்பு: தனிநபர்வரி, கார்ப்பரேட் வரியை உயர்த்தியது இலங்கை அரசு

இலங்கை அரசு மோசமான பொருளாதாரச் சூழலில் இருந்து விடுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் முதல்படியாக, வருமான வரி அளவை உயர்த்தி சிறப்பி அறிவிப்பாணையாக அரசிதழிலில் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. 

Sri Lanka increases taxes to increase state income
Author
First Published Oct 13, 2022, 5:23 PM IST

இலங்கை அரசு மோசமான பொருளாதாரச் சூழலில் இருந்து விடுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் முதல்படியாக, வருமான வரி அளவை உயர்த்தி சிறப்பி அறிவிப்பாணையாக அரசிதழிலில் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய அரசானை செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது, ஆனால் 2022, ஏப்ரல் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய வரிவிதிப்பின்படி, மாதம் ஒரு லட்சம் இலங்கை ரூபாய் சம்பாதித்தாலே வருமானவரி செலுத்த வேண்டும். இதற்கு முன் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் வரை வருமானவரி விலக்கு பெற்றனர். இந்த விலக்கு வரம்பு, 12 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு; பள்ளிகளுக்கு விடுமுறை; பீதியில் மக்கள்!!

இதற்கு முன் ஒருவர் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் அவருக்கு வருமானவரி வரம்புக்குள் வரமாட்டார். இனிமேல் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு மட்டும் வருமானவரி விலக்கு, அதன்பின் கூடுதலாக ரூ.5 லட்சம் சம்பாதித்தால், அதாவது 17 லட்சம் சம்பாதித்தால் 6 சதவீதம் வரி, அடுத்த 5 லட்சம்(22 லட்சம்) ரூபாய்க்கு 12 சதவீதம் வரி, அடுத்த 5 லட்சத்துக்கு 18 சதவீதம், 30 லட்சத்துக்கு 24 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.கார்ப்பரேட் வரியும் 24 சதவீதத்தில் இருந்தது 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதிபராக இருக்கும் ரணில் விக்ரசிங்கேதான், நாட்டின் நிதிஅமைச்சராகவும் உள்ளார், இந்த புதிய வருமானவரி தொடர்பா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். வருமானவரி செலுத்தும் முறை முற்றிலுமா மாற்றப்பட்டு, அரசுக்கு கூடுதல் வருவாயை தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

அதிபர் ரணில் விக்ரமசிங்கே விடுத்த அறிக்கையில் “ இலங்கை அரசுக்கு கிடைக்கும் 80 சதவீத வரிகள் மறைமுக வரிகள். ஒவ்வொரு குடிமகனும் எதற்காக வரி செலுத்துகிறோம் எனத் தெரியாமலே வரி செலுத்தி வருகிறார்கள். தங்களுக்குச் சம்பந்தமில்லாத செயல்களுக்கு வரி செலுத்துகிறார்கள். நாட்டின் கடைசி ஏழைக் குடிமகனும் கூட இந்த வரி வலையில் சிக்கிக் கொண்டான். இந்நிலையை மாற்றுவது காலத்தின் தேவை” என்று தெரிவித்துள்ளார். 

2019ம் ஆண்டு வரிக்கொள்கை உருவாக்கப்பட்டது, ஜிடிபியில் 14 சதவீதம் வரிமூலம் கிடைக்கிறது. வரிக்கொள்கையில் மாற்றம் செய்ததன் காரணமாக, 8.5 சதவீதமாகக் குறைந்தது. தற்போது சர்வதேச செலவாணி நிதியத்துடன் நடத்திய ஆலோசனைக்குப்பின், வரி விகிதம் 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜனா பாலவேகயே(எஸ்ஜேபி) கட்சி இந்த புதிய வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து விமர்சித்துள்ளது.

இந்தியா-சீனா நேரடி விமான சேவை தொடங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை

கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஹர்ஷா டி சில்வா கூறுகையில் “ இந்த வரிச் சீர்திருத்தம் தேவைதான், ஒப்புக்கொள்கிறோம். ஆனால், மக்கள் தாங்கக்கூடிய அளவில் இது செயல்படுத்தப்பட வேண்டும். நாட்டில் உணவுப் பணவீக்கம் 90 சதவீதம் இருக்கிறது, மக்களின் வருமானம் 50 சதவீதம் குறைந்துவிட்ட நிலையில் வரிவிதிப்பு சாத்தியமா” எனத் தெரிவித்துள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios