ஜெய் ஹோ இஸ்ரோ! சந்திரயான்-3 வெற்றிக்காக மணல் சிற்பம் மூலம் வாழ்த்திய சுதர்சன் பட்நாயக்
ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சந்திரயான்-3 வெற்றிக்கு வாழ்த்தும் வகையில் 'ஜெய் ஹோ இஸ்ரோ!' என்ற வாசகத்துடன் மணல் சிற்பம் ஒன்றஐ உருவாக்கியுள்ளார்.
ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சந்திரயான்-3 வெற்றிக்கு வாழ்த்தும் வகையில் 'ஜெய் ஹோ இஸ்ரோ!' என்ற வாசகத்துடன் மணல் சிற்பம் ஒன்றஐ உருவாக்கியுள்ளார்.
'ஜெய் ஹோ இஸ்ரோ' என்று பெயரிடப்பட்ட தனது மணல் சிற்பம் பற்றி சுதர்சன் பட்நாயக் ட்விட்டரில் அதன் படத்தையும் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "ஜெய் ஹோ இஸ்ரோ. ஆல் தி பெஸ்ட்! சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வாழ்த்துவதற்காக "ஜெய் ஹோ" என்ற செய்தியுடன், அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள டென்வரில் நான் உருவாக்கிய சிறிய மணல் சிற்பம். இதை உருவாக்க 45 நிமிடங்களில் 25 கிலோ மணலைப் பயன்படுத்தியுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.
மூவர்ணக் கொடி மீது கால் வைத்து நிற்பதா? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் நெகிழ வைத்த செயல்!
மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலம் பூரியில் ஊரில் 1977ஆம் வருடம் ஏப்ரல் 15ஆம் தேதி பிறந்தார். இந்தியாவில் மணற் சிற்பக் கலை பிறப்பதற்கு காரணமாக இருந்தவர் இவர்தான். ஏழு வயதிலிருந்து மணலில் சிற்பங்கள் செய்துவருகிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்களை வடித்துள்ளார். உலக அளவில் நிறைய பதக்கங்களை வென்றுள்ளார். சுதர்சன் பட்நாயக்குக்கு 2014ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
சந்திரயான்-3
சந்திரயான்-3 பற்றி அப்டேட் கொடுத்திருக்கும் இஸ்ரோ, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முயற்சியைத் தொடங்க அனைத்தும் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மாலை 5:44 மணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு லேண்டரின் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் இஸ்ரோவின் குழு கட்டளைகள் வரிசையாக செயல்படுத்துவதை உறுதிசெய்துகொண்டே இருக்கும் எனவும் கூறியுள்ளது.
சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் செயல்பாடுகளின் நேரடி ஒளிபரப்பு மாலை 5:20 மணிக்குத் தொடங்கும். இணையத்திலும் தொலைக்காட்சி சேனல்களிலும் தரையிறங்கும் முயற்சியை அனைவரும் காண இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.