பிணங்களால் நிரம்பும் இத்தாலி. திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம்..!! ஒரு நாடே கல்லறைத் தோட்டமாகும் கொடூரம்..!!

 இத்தாலி மட்டுமல்லாது மத்திய  தரைக் கடல் நாடுகள் முழுவதும் சுகாதார அதிகாரிகள் இரண்டு வார  ஊரடங்கு உத்தரவை  கடைப்பிடித்து வந்தனர் .

Italy death rate increased yesterday only 743 peoples died by corona

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  743 ஆக அதிகரித்துள்ளது ,  மத்திய தரைக்கடல் நாடுகள் முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வரும் நிலையிலும் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதன .  இது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இந்த வைரசுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது . 

Italy death rate increased yesterday only 743 peoples died by corona

இந்த வைரஸ்  சீனாவில்  தோன்றியிருந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இத்தாலியில் காட்டுத்தீயைவிட வேகமாக பரவி மனித உயிர்களை பலி வாங்கி வரும்  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வந்தது .  இந்நிலையில் நோய்த் தொற்றுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருந்தாலும் ,  அங்கு  உயிர் இழப்பு என்பது குறைந்தபாடில்லை .   இத்தாலி மட்டுமல்லாது மத்திய  தரைக் கடல் நாடுகள் முழுவதும் சுகாதார அதிகாரிகள் இரண்டு வார  ஊரடங்கு உத்தரவை  கடைப்பிடித்து வந்தனர் .  இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று இத்தாலியில் பலி எண்ணிக்கை 601ஆக இருந்தது இந்நிலையில் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்துள்ளது கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி இத்தாலியில் முதல் உயிரிழப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது . 

Italy death rate increased yesterday only 743 peoples died by corona

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முதல் 21 நாட்களுக்கு முழுஅடைப்பு நடத்த பாரதப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் ,  அவசியமில்லாமல் வெளியில் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்ட மோடி கொரோனாவை எதிர்த்து போராட இந்தியர்கள் அரசு சொல்லும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் .  இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios