இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று திங்களன்று லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் பலர் இறந்துள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) இன்று திங்களன்று பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளில் இஸ்ரேல் படைகள் நடத்திய பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கி, ஒரே நாளில் சுமார் 800 இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வான்வழித் தாக்குதல்களில் 21 குழந்தைகள் மற்றும் 39 பெண்கள் உட்பட குறைந்தது 274 பேர் கொல்லப்பட்டுள்ளார் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 1,024 பேர் இதில் காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…
Scroll to load tweet…

உளவுத்துறை பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் IDF, நாள் முழுவதும் பல தாக்குதல்களை நடத்தி, ஹிஸ்புல்லாவின் ஏவுகணையின் உள்கட்டமைப்பை குறிவைத்தது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த லெபனான் போருக்குப் பிறகு மிக மோசமான நாளாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லா ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற இராணுவ சொத்துக்களை மறைத்து வைத்திருந்த குடியிருப்பு கட்டிடங்களில் தாக்குதல் நடந்த வீடியோக்களை IDF எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

லெபனானுடன் இஸ்ரேலுக்கு என்ன பிரச்சனை? பேஜர், வாக்கி டாக்கி குண்டுவெடிப்பு எப்படி நடத்தப்பட்டது?

"துல்லியமான உளவுத்துறையின் தரவுகளின் அடிப்படையில், ஹிஸ்புல்லா தனது இராணுவ உள்கட்டமைப்பை மறைத்து வைத்திருந்த கட்டிடங்களை தான் IDF தாக்கியது," என்று IDF கூறியுள்ளது. "ஹிஸ்புல்லாவின் இராணுவ திறன்களை அகற்றுவதன் மூலம், அதனால் இஸ்ரேலிய குடிமக்களுக்கு நேரடியாக ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்கவே இந்த தாக்குதல் என்றும் கூறியுள்ளது.

Scroll to load tweet…

டெல் அவிவில் உள்ள கிரியா இராணுவ தலைமையகத்தில் உள்ள நிலத்தடி கட்டளை மையத்திலிருந்து பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "நாங்கள் அச்சுறுத்தலுக்காகக் காத்திருக்கவில்லை, அதை எதிர்பார்க்கிறோம்," என்று அவர் ஒரு வீடியோ அறிக்கையில் கூறினார். "இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் குடிமக்களை நோக்கமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை நாங்கள் அழித்து, வடக்கில் சமநிலையை மாற்றுகிறோம்."

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை இருப்புக்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத செயல்பாட்டாளர்களை அகற்றுவதே இஸ்ரேலின் தற்போதைய வான்வழிப் தாக்குதலின் நோக்கம் என்று நெதன்யாகு உறுதிப்படுத்தினார். "யார் நம்மை காயப்படுத்த முயன்றாலும், நாங்கள் அவர்களை இன்னும் அதிகமாக காயப்படுத்துவோம்," என்று அவர் அறிவித்தார், மேலும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டைகளில் வசிக்கும் லெபனான் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு IDF எச்சரித்துள்ளது. "ஹிஸ்புல்லா பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது, வேண்டுமென்றே குடியிருப்பு கட்டிடங்களுக்குள் ஆயுதங்களை மறைத்து வைக்கிறது," என்று IDF மேலும் கூறியது, மேலும் குடியிருப்பாளர்கள் ஹிஸ்புல்லாவின் இராணுவ உள்கட்டமைப்பிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியது.

இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் ஹிஸ்புல்லா இலக்குகளைத் தொடர்ந்து தாக்கி வருவதால் நிலைமை பதட்டமாக உள்ளது, மேலும் போராளிக் குழுவிற்கு முக்கிய மூலோபாய இடமான பெக்கா பள்ளத்தாக்கில் மேலும் தாக்குதல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மோதல் தீவிரமடைவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று லெபனான் சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு.! வெளியான ஷாக் தகவல்- அதிர்ச்சியில் அமெரிக்கா!