Asianet News TamilAsianet News Tamil

இஸ்ரேல் - ஹமாஸ் போர்; ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ரஷ்யாவின் வாக்னர் குரூப்!!

இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் நடந்து வரும் நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பும் தாக்குதல் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.
 

Israel - Hamas war: Russia's Wagner group sends missiles to Hezbollah
Author
First Published Nov 3, 2023, 2:26 PM IST | Last Updated Nov 3, 2023, 2:26 PM IST

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் அடுத்த கட்டமாக ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் எஸ்ஏ 22  ரக பீரங்கிகளை வழங்குவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

லெபனானில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பு ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு. இவர்கள் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ரஷ்யாவின் கூலிப்படையான வாகனர் கூலிப்படை ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பீரங்கிகளை வழங்க இருப்பதை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

SA-22 என்பது Pantsir-S1 என்றும் அழைக்கப்படுகிறது. பீரங்கியான இதன் மீதிருந்து ஏவுகணைகளை ஏவலாம். மேலும், எதிரிகள் செலுத்தும் ஏவுகணைகளையும் தடுக்கலாம். இது ரஷ்யாவின் தயாரிப்பாகும். இந்த பீரங்கி ரஷ்யா - உக்ரைன் போரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பீராங்கி மத்திய கிழக்கு நாடுகளிலும் நிலைநிலை நிறுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் ரஷ்யாவும் இணைந்துள்ளது.  

இந்தியர்கள் ஹமாஸுக்கு எதிராக நிற்க வேண்டும்! ஹமாஸ் தலைவரின் மகன் மொசாப் கோரிக்கை

இஸ்ரேலுக்கும் - ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வரும் நிலையில், எல்லையில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே போர் வலுவடைந்துள்ளது.  ஆனால், லெபனான் பகுதியில் இருந்து ஆயுதங்களை காசாவுக்கு கடத்தி இஸ்ரேலுக்கு எதிராக போரிட முடியுமா என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. 

ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு வாக்னர் கூலிப்படை ஆயுதங்கள் வழங்க இருப்பது குறித்து எந்த தகவலையும் ரஷ்யா வெளியிடவில்லை. ஹமாஸ் உடன் இணைந்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு போரிடுவதை தடுக்கும் வகையில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலை நிலைநிறுத்தியுள்ளது. 

ஊழியர்களின் நலன் காக்கும் நாடு.. உலகளாவிய ஆய்வில் கடைசி இடத்தில் ஜப்பான் - இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்தனர். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். வெளியில் இருந்து இஸ்ரேல் மீது போர் தொடுப்பதை கண்டித்து இருந்தார். ஆனால், இதையும் மீறி கடந்த வாரம் சந்தித்துக் கொண்ட ஹமாஸ், ஹிஸ்புல்லா, பாலஸ்தீனத்தில் இருந்து செயல்படும் இஸ்லாமிக் ஹிகாத் அமைப்புகள் ஒருங்கிணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிடுவது என்று முடிவு செய்துள்ளனர். 

இந்த வாக்னர் கூலிப்படைதான் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த கூலிப்படைக்கும் ரஷ்யாதான் நிதியுதவி அளித்து வருகிறது. இந்த கூலிப்படையை நிறுவி இருந்த எவ்ஜெனி பிரிகோசின் இறுதியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக திரும்பினார். ஒரு கட்டத்தில் நண்பராக இருந்து எதிரியாக மாறி மாஸ்கோவின் தெருக்களில் தனது ராணுவத்தை கொண்டு சென்றார் பிரிகோசின். இதனால் புடினின் நம்பிக்கை புத்தக்கத்தில் இருந்து பிரிகோசின் வெளியேறினார். இந்த நிலையில்தான் சமீபத்தில் விமான விபத்தில் பிரிகோசின் உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios