பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆதரவா? சரத் பவாருக்கு அமைச்சர் பியூஸ் கோயல் கண்டனம்!!
பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரவு அளிப்பது வருந்தத்தக்கது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பலமுறை பதவி வகித்தவர் சரத்பவார். பயங்கரவாதம் தொடர்பான அவரது அணுகுமுறை வியப்பளிக்கிறது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்து இருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ''இது மிகவும் கவலையளிக்கிறது. உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தாலும் அது அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பலமுறை பதவி வகித்தவர், பயங்கரவாதம் தொடர்பான பிரச்னைகளில் இப்படி சாதாரணமான பார்வையைக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. பயங்கரவாதிகள் பாட்லா ஹவுஸ் மீது தாக்குதல் நடத்தியபோதும், அந்த அரசாங்கத்தின் அங்கத்தின்றாகத்தான் சரத் பவார் இருந்தார். இப்போது இந்த மாதிரியான நிலைப்பாடு எடுத்திருப்பதை நிறுத்த வேண்டும். சரத் பவார் முதலில் தேசத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.. என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் இஸ்ரேலுக்குள் வீசினர். மேலும் இஸ்ரேல் மக்களை சிறைபிடித்தனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் நூற்றுக்கணக்கான மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகளை இஸ்ரேல் தொடர்ந்து அழித்து வருகிறது. இந்த சண்டையில் இதுவரை இரு தரப்பிலும் சுமார் 4000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸா பகுதியில் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்களை திரட்டி காஸா மீது தரைப்படை நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகியுள்ளது.
இஸ்ரேல் - காசா போர்: 'நாங்கள் ஹமாஸை நேசிக்கிறோம்; ஏசியாநெட் செய்தியாளர் அஜித்தின் நேரடி ரிப்போர்ட்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நிலை குறித்து விசாரித்து அறியவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களிடம் பேசுவதற்காக இன்று காலை டெல் அவிவ் சென்றுள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் உணர்வுபூர்வமானது, அபாயகரமானது என்றும், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற நாடுகளின் கருத்துகளை புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்து இருந்தார். மத்திய அரசு ஹமாஸ் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், சரத் பவாரின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
காசா மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு!