Asianet News TamilAsianet News Tamil

காசா மருத்துவமனை தாக்குதலில் 500 பேர் பலி: யார் காரணம் என மாறிமாறி குறை கூறும் இஸ்ரேல் - ஹமாஸ்!

500 பேர் கொல்லப்பட்ட காசா அல் அரபி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பொறுப்பு யார் என இஸ்ரேலும் ஹமாஸும் மாறிமாறி குற்றம்சாட்டியுள்ளனர்.

Israel Hamas Trade Blame After 500 Killed At Gaza Hospital sgb
Author
First Published Oct 18, 2023, 9:20 AM IST | Last Updated Oct 18, 2023, 9:34 AM IST

காசாவின் பாலஸ்தீன பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலும் ஹமாஸும் மாறிமாறி குற்றம்சாட்டியுள்ளனர்.

"இஸ்லாமிய ஜிஹாத் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் தோல்வி அடைந்து, காசாவில் உள்ள மருத்துவமனையைத் தாக்கியுள்ளது என உளவுத்துறையின் பல ஆதாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது" என்று இஸ்ரேலிய ராணுவ ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார். ​​இஸ்ரேல் மருத்துவமனைக்கு அருகில் எந்த வான்வழி நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும், பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலின் ராக்கெட்டுகள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹமாஸ் ஆதரவு பெற்ற இஸ்லாமிய ஜிஹாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேல் ராணுவம்தான் காசா மருத்துவமனை தாக்குதலை நடத்தியிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. காசா மருத்துவமனையில் கொடூரமான படுகொலையை நிகழ்த்தியிருக்கும் இஸ்ரேல் அதற்குப் பொறுப்பேற்காமல் தப்பிப்பதற்கு கடுமையாக முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய 5வது விமானம்

இது பயங்கரமான தாக்குதல் என்றும் கூறிள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரஸ் தெரிவித்துள்ளார். மருத்துவமனை தாக்குதலுக்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியுள்ளார். காசாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள பயங்கரமான உயிரிழப்புகளால் கோபமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் காசாவில் மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்துக்கு தொடர்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். "ஒட்டுமொத்த உலகமும் தெரிந்து கொள்ள வேண்டும். காசாவில் உள்ள காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள்தான் அங்கு உள்ள மருத்துவமனையைத் தாக்கியுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்புப் படை அல்ல. எங்கள் குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்றவர்கள் தங்கள் குழந்தைகளையும் கொலை செய்கிறார்கள்" என்று நெதன்யாகு கூறினார்.

மருத்துவமனை தாக்குதலைத் தொடர்ந்து பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவு ஒன்றை நீக்கியது. நெதன்யாகு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஒளியின் குழந்தைகளுக்கும் இருளின் குழந்தைகளுக்கும் இடையே நடக்கும் போர் என்றும் மனித நேயத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் நடக்கும் போராட்டம் என்றும் கூறியதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

நீ எனக்கு வேண்டாம்... 11 வயது மகனை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று சாக்கடையில் ஒளித்து வைத்த சித்தி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios