குறி தவறி தாக்குதல்... காசாவுக்குப் பதில் எகிப்து பகுதியில் விழுந்த குண்டு... இஸ்ரேல் ராணுவம் விளக்கம்
தற்செயலாக நடந்த இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் உடனடியாக வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் எகிப்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் குழுவை முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கில் காசாவை சரமாரியாகத் தாக்கிவரும் இஸ்ரேல் ராணுவம், ஞாயிற்றுக்கிழமை தவறுதலாக எகிப்து ராணுவம் மீது குண்டுவீசியுள்ளது. காசா எல்லைக்கு அருகே பாலஸ்தீனியப் பகுதியை குண்டுவீசித் தாக்கியபோது, அதன் டாங்கிகளில் ஒன்று தற்செயலாக எகிப்து பகுதியைத் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடந்திய இந்தத் தவறுதலான தாக்குதலில் வீரர்கள் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக எகிப்திய ராணுவம் கூறியுள்ளது. ஆனால் அது பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
கெரெம் ஷாலோம் பகுதிக்கு அருகில் நடந்த இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறி தவறியதற்கான காரணம் குறித்து விவரங்கள் ஆராயப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனேடியர்களுக்கு விசா சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் காசாவுக்கான வழங்கும் உதவிகளை எகிப்து நிறுத்தப்போவதில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 7ஆம் தேதி போர் வெடித்ததில் இருந்து காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வழிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், எகிப்து காசாவுக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் 37 ட்ரக்குகளில் இஸ்ரேலில் இருந்து மூன்று கிலோமீட்டர்கள் (இரண்டு மைல்) தொலைவில் இருக்கும் ரஃபா எல்லை வழியாக காசாவை அடைந்தன.
ஹமாஸ் குழுவின் தகவலின்படி, இதுவரை இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 4,650 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, காஸாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 100 டிரக்குகளில் அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து 143 பேருடன் 6வது விமானம் டெல்லி வருகை