ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து 143 பேருடன் 6வது விமானம் டெல்லி வருகை
இதுவரை 20 நேபாள குடிமக்கள் உட்பட சுமார் 1,200 பேர் 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
காசாவில் உள்ள இஸ்ரேலிய பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினர் அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய ராக்கெட் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் மூண்டது. இந்தப் போர் 15வது நாளை எட்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் ஆறாவது விமானத்தின் கீழ் 143 பேர் இஸ்ரேலில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "6வது ஆபரேஷன் அஜய் விமானம் டெல்லியில் தரையிறங்கியது. 2 நேபாள குடிமக்கள் உட்பட 143 பயணிகள் இந்த விமானத்தில் வந்துள்ளனர். மத்திய எஃகு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே விமான நிலையத்தில் அனைவரையும் வரவேற்றார்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இப்படியெல்லாம் போர் நடந்ததே கிடையாது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு
141 இந்தியர்கள் மற்றும் 2 நேபாளிகளுடன் ஆறாவது விமானம் இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து டெல்லிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டது.
இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு மத்தியில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை தாயகம் அழைத்துவர 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தை இந்தியா தொடங்கியது. முன்னதாக, 18 நேபாள குடிமக்கள் உட்பட 286 இந்திய பிரஜைகளை ஏற்றிக்கொண்டு ஐந்தாவது விமானம் செவ்வாய்கிழமை நள்ளிரவு டெல்லி வந்தது.
இதுவரை 20 நேபாள குடிமக்கள் உட்பட சுமார் 1,200 பேர் 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்த மகனுக்கு 20 வருட சிறை தண்டனை பெற்றுத் தந்த தாய்!