மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகிறாரா? தீயாக பரவும் தகவல்.. இலங்கையில் என்ன நடக்கிறது?

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற வதந்திகளை ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி மறுத்துள்ளது.

Is Mahinda Rajapaksa Prime Minister again? Information spreading like fire.. What is happening in Sri Lanka?

இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்தவர் 77 வயதான மஹிந்த ராஜபக்சே. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வெடித்த மிகப்பெரிய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்..

இதையும் படிங்க : சைக்கிள் செயினால் கழுத்தை நெரித்து.. 12 சிறுவனை கொடூரமாக கொன்ற 3 சிறார்கள்..

மகிந்த ராஜபக்சவைத் தவிர, நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அவரது இளைய சகோதரர் கோத்தபய ராஜபகசவும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பமும் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாகவும், பெரும் ஊழலால் இலங்கை வீழ்ந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியதால் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டனர்.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவியது. அதற்கேற்றவாறு இலங்கை தலைநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வதந்திகள் மேலும் வலுப்பெற்றன. முக்கியமான அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திய வீரர்கள் சாலைகளில் சீரற்ற பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வதைக் காண முடிந்தது.

எனினும் நகரில் பிரச்சனையை உருவாக்க ஒரு குழு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச விரைவில் பிரதமராக பதவியேற்பார் என்ற தகவல்கள் வேகமாக பரவியது. எனினும் இந்த தகவலை ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி மறுத்துள்ளது. மகிந்த ராஜபக்ச பிரதமர் ஆவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்றும் அக்கட்சி தெரிவித்தது. மேலும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும், தங்கள் கட்சி ஜனாதிபதியிடம் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, மகிந்த ராஜபக்சவுக்குப் பதிலாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமரானார். எனினும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோத்தபய ராஜபக்ச ராஜினாமா தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம், ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றார். 2024 இறுதி வரை கோத்தபய ராஜபக்சவின் மீதமுள்ள பதவிக் காலத்தை விக்ரமசிங்க் அதிபராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கார் ஏசி சரியா வேலை செய்யலையா? குளிர்ச்சியை மேம்படுத்த உதவும் எளிய ட்ரிக்ஸ் இதோ..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios