Asianet News TamilAsianet News Tamil

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வங்கதேசம்? -தொடர்ந்து மாணவர்கள் போராட்டம்; பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி ஓட்டமா?

வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
 

Is Bangladesh Facing Imminent Military Rule Amid Deadly Protests Demanding PM Hasina on the run?
Author
First Published Aug 5, 2024, 3:02 PM IST | Last Updated Aug 5, 2024, 4:08 PM IST

வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரித்து அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா திறன்ற்ற அரசியலால் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். இதனால் வங்கதேசம் முழுவதும் பதற்றமான நிலை நிலவிவருகிறது.

நேற்று முதல் மாணவர்கள் மீண்டும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைவிடாத போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது. வங்கதேச பாதுகாப்பு படையினர் இந்த வன்முறையை ஒடுக்க முயன்றனர். இந்த தாக்குதலில் மேலும் 100 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்திற்கு பலியாகியுள்ளனர்.

மூன்றாம் உலகப்போரின் தேதியை கணித்த இந்திய ஜோதிடர்.. வரவிருக்கும் அழிவு குறித்து எச்சரிக்கை..

இதனிடையே, வங்கதேச ராணுவ அதிகாரிகள் நாட்டின் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, அந்நாட்டு ராணுவ தளபதி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வங்கதேச ராணுவம் வலியுறுத்தியது. அதன்பின்னர், பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய 45 நிமிடம் காலக்கெடு விதிக்கப்பட்டது.

அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் இராணுவ தலைவர் கொல்லப்பட்டார்... உறுதிப்படுத்திய இஸ்ரேல்

இந்நிலையில், வேறுவழியே இல்லாமல் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கையோடு வெளிநாட்டுக்கு ஷேக் ஹசீனா தப்பிச் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios